Arya in Captain Movie Update
டெடி, சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
‘டெடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
‘கேப்டன்’ படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…
பிரபல நடிகைகளான அம்பிகாவும், ராதாவும் உடன்பிறந்த சகோதரிகள். சொத்து மற்றும் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…