இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:

“‘டோரதி’ படத்தில் மலையாளப் பெண்ணாக நடித்துள்ளேன். இதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இந்தக் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கனவுத் திட்டத்தில், எனக்கு மிகவும் பிடித்த மனதில் நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரம் எனக்கு மட்டுமல்ல, நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்.

இளையராஜாவின் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ‘டோரதி’ படத்தின் மூலம் அந்தக் கனவு நிஜமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக இளையராஜாவுக்கு நன்றி.

மதுரை என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டா, அடுத்தது மீனாட்சியம்மன் கோவில். இந்தப் படமும் மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பதால் நல்ல ஒரு வைப் உள்ளது.

ரிஷியும், சனந்தும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுக்காக திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து நானும் விசிலடிக்கப் போகிறேன். ‘டோரதி’ ஒரு தமிழ் படம் என்பதில் நாம் பெருமைப்படலாம். இந்தப் படம் உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago