‘ஜனநாயகன்’ டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த ‘பராசக்தி’

‘ஜனநாயகன்’ டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த ‘பராசக்தி’

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது.

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வைரலாகி வருகிறது. அதாவது வெளியான 24 மணி நேரத்தில் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ’பராசக்தி’ ட்ரெய்லர் படைத்துள்ளது. விறுவிறுப்பான ட்ரெய்லர் கட், இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் என இந்த ட்ரெய்லர் தெறிக்கிறது.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. இதுவும் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்துக்கு நிலவும் பெரும் எதிர்பார்ப்பு காரணமாக இந்த ட்ரெய்லர் வைரல் ஆனது. இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வைகள் பெற்றிருந்த நிலையில் தற்போது இதனை ‘பராசக்தி’ ட்ரெய்லர் முறியடித்துள்ளது.

Tamil Nadu is a state that gives importance to education.. Vijay Sethupathi-Karthi thanks..
dinesh kumar

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

2 days ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

2 days ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

2 days ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

2 days ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

2 days ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

2 days ago