taapsee-latest-viral-update
தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் டாப்ஸி. இவர் தமிழில் தனுஷின் “ஆடுகளம்” படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்து உள்ள டாப்ஸி தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
பாலிவுடில் பெரிய நடிகையாக இருக்க வேண்டும் என்ற ஆசையால் மும்பையிலேயே செட்டிலாகி படங்களின் நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போல்டான படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளார்.
இவர் தற்போது பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறை வைத்து இயக்கியிருக்கும் “சபாஷ் மித்து” என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ள இந்த படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதை அடுத்து டாப்ஸி சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் என் வாழ்நாளிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் “சபாஷ் மித்து” தான். ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் சில முன்னணி ஹீரோக்களின் சம்பளத்தில் பாதி கூட இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என ஓப்பனாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் சினிமா துறையில் ஜெண்டர் ஈக்குவாலிட்டி என்பது இங்கே கொஞ்சம் கூட கிடையாது. இங்கே நடிகைகளை பலரும் சம்பள விஷயத்தில் ஏமாற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை டாப்ஸி ஒரு படத்திற்கு அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வரைதான் சம்பளமாக வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்படி பேட்டியில் கொடுத்திருக்கும் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…