Suseenthiran about Nidhhi Agerwal
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’. இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனிடையே ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வால் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் வந்த இயக்குனர் சுசீந்திரன் ‘சிம்பு மாமா ஐ லவ் யூனு சொல்லு’ என்று கூறிக்கொண்டே இருந்தார். இருப்பினும் நிதி அகர்வால் கடைசி வரை அவ்வாறு கூறவில்லை.
சுசீந்திரனின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் பலர் சுசீந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஒரு நடிகையை இப்படி கட்டாயப்படுத்துவது, அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஆடியோ ரிலீஸ் விழாவில் நிதி அகர்வாலை நான் சர்ச்சைக்குரிய வகையில் பேச வைத்ததாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி ஐ லவ் யூ என்று சொல்லி காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நிதி அகர்வால் நடித்துள்ளார். இதை வைத்துதான் நான் ஆடியோ ரிலீஸ் விழாவில் அப்படி சொல்ல சொன்னேன். நிறைய பேர் அதை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்’ என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…