தமிழ் சினிமாவில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#Suriya's look for #Kanguva periodic portions! pic.twitter.com/k4UGvu9ebQ
— VCD (@VCDtweets) May 10, 2023