Suriya - Jyotika with International Award
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை வென்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்நிலையில், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருது தற்போது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விருது நடிகர் சூர்யா கைவசம் கிடைத்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது சூரரைப் போற்று படக்குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது என நடிகர் சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…