Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் ஓரம் கட்டப்பட்ட வாடிவாசல், சூர்யாவின் புதிய படம் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரியா. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் மீண்டும் தள்ளி போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு முன்பாக சூரியா வேறொரு இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

மேடம் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம்தான் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya in Upcoming Movie Update viral
Suriya in Upcoming Movie Update viral