தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா பிதாமகன் நந்தா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் மதுரையில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யா ஜோதிகா மட்டுமல்லாமல் நடிகர் அதர்வா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
