Suriya 47 Story,சூர்யா 47 படத்தின் கதை இதுதானா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் சில மாத இடைவெளியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சூர்யா, ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகும் 47-வது திரைப்படம் தயாராக இருப்பதாக அறிவிப்புகள வெளியாகிவிட்டன. மேலும் இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட ) நடைபெற்று முடிந்தது. தற்போது சூர்யா இல்லாத காட்சிகளை இயக்குநர் ஜீத்து படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சூர்யா 47 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
அதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களமாக பார்க்கையில், ஒரு சீரியஸான க்ரைம் ஒன்று நடந்துவிடுகிறது. அதனை எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதை ஒரு போலீஸ் டீம் விசாரணை செய்தால் எப்படி இருக்கும் என்பது தான் சூர்யா 47 படத்தின் ஒரு வரிக் கதை என கூறப்படுகிறது.
இப்படம் செம மாஸாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்கும். மேலும், சூர்யா இப்படத்தில் நெகட்டிவ் ஷெட் கலந்த ஹீரோவாக நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுவரை அவர் பல போலீஸ் ரோல்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாத்திரமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…