தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. குட்டி வெப் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்ததை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 44 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2d entertainment நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
