Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 43 குறித்து வெளியான மாஸ் அப்டேட்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்திலிருந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் சூர்யா 43 திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, நடிகர் சூர்யா அடுத்ததாக, இயக்குனர் சுதா கொங்குராவுடன் மீண்டும் இணைய இருப்பதாகவும் அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

suriya 43 movie latest update viral
suriya 43 movie latest update viral