சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு
நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இணைந்து புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘புருஷன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் டைட்டில் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
விஷால் உடன் தமன்னா மற்றும் யோகி பாபு இதில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏசிஎஸ் அருண் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத் பணியாற்றுகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சுமார் 5.41 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த புரோமோவில் விஷால், தமன்னா மற்றும் யோகி பாபு நடித்துள்ள ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. வழக்கமாக சுந்தர்.சி படம் என்றால் அது கமர்ஷியல் படமாகவே இருக்கும். அதை இந்த படத்தின் புரோமோ உறுதி செய்துள்ளது. காமெடி, ஆக்ஷன் ஷாட்கள் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது. மதகஜராஜா வெற்றிக்கூட்டணியாக இந்தப் படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


