மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதையடுத்து இவர் தயாரித்த படம் ‘நாங்க ரொம்ப பிஸி’. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி, ஜெய் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

19 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

19 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

19 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

20 hours ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

20 hours ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

22 hours ago