Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தர்.சி & விஷால் மீண்டும் இணைந்து ஒரு புதிய அதிரடி அப்டேட்

Sundar.C and Vishal team up again for a new action-packed update

சுந்தர்.சி & விஷால் மீண்டும் இணைந்து ஒரு புதிய அதிரடி அப்டேட்

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருந்த ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி தனது அடுத்த படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அவ்வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே, தனது அடுத்த படத்தினை உடனடியாக தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். ஏசிஎஸ் நிறுவனம் மற்றும் விஷால் இணைந்து தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு டிசம்பர் 5-ந் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோ ஷுட் முடிவடைந்துவிட்டது.

குடும்பப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளார். இதில், நாயகியாக தமன்னா நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா பணிபுரியவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.