Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜீ தமிழ் சீரியலில் விஜய் டிவி சீரியல் நடிகை. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

srilekha-rajendhiran-entry-in zee tamil anna-serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரேட்டிங்கும் ஒவ்வொரு வாரமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது.

தற்போது இந்த சீரியலில் சௌந்தரபாண்டி தன்னுடைய தர்மகத்தா பதவியை பாதுகாத்து கொள்ள சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஷண்முகம் சூடாமணியின் வார்த்தையை ஏற்று தர்மக்கத்தா தேர்தலில் நின்று சௌந்தரபாண்டியின் தவறுகளை வெளியே கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

இப்படி அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அதிரடியாக களமிறங்க உள்ளார் ஸ்ரீலேகா ராஜேந்திரன், வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்த இவர் சின்னத்திரையிலும் எண்ணற்ற சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடித்து வரும் நிலையில் அண்ணா சீரியலில் பயங்கரமான வில்லியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சௌந்தரபாண்டியின் அக்காவாக பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இவரது காட்சிகள் சீரியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

srilekha-rajendhiran-entry-in zee tamil anna-serial
srilekha-rajendhiran-entry-in zee tamil anna-serial