இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆரம்பத்தில் லேசான அறிகுறியுடன் இருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அதன் பிறகு கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக சென்று கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்ட கொரானா பரிசோதனையில் எஸ்பிபி அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
மேலும் நுரையீரல் தொற்று குறைந்து கொண்டே வருவதாக சரண் தெரிவித்துள்ளார். பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
எஸ்பிபி தான் பேச நினைப்பதை எழுதி காண்பிப்பதாகவும், ஐ-பேட் மூலமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…