நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
இப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது, மேலும் உண்மை கதையின் தழுவலான இப்படம் பெரியளவிலான ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை மாதங்களுக்கு பிறகும் கூட பல்வேறு சாதனைகளை இப்படம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது IMDB மதிப்பீட்டின் அடிப்படையில் உலகம் முழுவதும் பட்டியலிடப்பட்ட டாப் படங்களில், இந்தியளவில் இருந்து சூரரை போற்று திரைப்படம் மட்டும் அதில் இடம்பெற்றுள்ளது.