தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி இருந்தது.
மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தில் நடிக்க உள்ளார்.
தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கார இயக்கத்தில் எஸ்.கே25 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் ஸ்ரீலிலா, அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது இந்த படத்திற்கு “பராசக்தி” என டைட்டில் வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.