Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

Sk 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

SK20 Movie First Look Poster Release

தமிழ் சினிமாவில் சாதாரண தொகுப்பாளராக பயணத்தைத் தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரீனா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், எஸ் கே 20 உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன.

அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே 20 தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கியுள்ளது. இந்த படத்தை சுரேஷ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.