தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
மேலும் அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகவுள்ள டான் திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சிவகார்த்திகேயன் அடுத்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது அவர் அப்படத்திற்காக வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி சிவகார்த்திகேயன் SK 20 படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Very happy to join with @AsianSuniel sir @SBDaggubati sir & my frnd @iamarunviswa for #SK20 ,directed by my fav @anudeepfilm & music by @MusicThaman bro????
A fun-filled entertainer on the way????❤️#NarayanDasNarang @SVCLLP @SureshProdns #PuskurRamMohanRao @ShanthiTalkies pic.twitter.com/3g5sjGCePH— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 1, 2022