Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு

Sivakarthikeyan-new-movie-title-release Updates

தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கயுள்ளது.

சிவகார்த்திகேயனின் 22 ஆவது படமான இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். போன்ற தகவல்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்த படக்குழு தற்போது இப்படத்திற்கு “மாவீரன்” என்ற டைட்டிலை வைத்துள்ளது. இதனை மாசான ஆக்சன் வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை ரவுடிகள் கூட்டமாக அடித்து உதைத்து விட்டு செல்லும்போது மேலே இருந்து கயிறுகள் வந்து சிவகார்த்திகேயனை தூக்கி நிறுத்துவது போலும் அதற்குப் பின் அந்த ரவுடிகளை அவர் மாசான ஆக்சன் களுடன் அடிப்பது போலும் மேலும் சில ரவுடிகள் கூட்டமாக வந்து நிற்பவர்களை “மாவீரன்” போல் தைரியமாக எதிர்த்து நிற்பது போல் அந்த வீடியோ உருவாகியுள்ளது.

இதனைப் பார்க்கும் பொழுது இப்படம் முழுக்க அதிரடி ஆக்சன் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகின்றனர்.