Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் லுக் எப்படி உருவானது? வீடியோ வைரல்

sivakarthikeyan-maaveeran-transformation-video

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை என படிப்படியாக வளர்ந்து வந்து இன்று உச்சம் பெற்றுள்ள இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் மாவீரன்.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளே ரூபாய் 10 கோடி வசூலை தொட்ட இந்த படம் நாளுக்கு நாள் வசூலை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் எப்படி உருவானது என்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஸ்டைலை ரசிகர்களும் பாலோ செய்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.