Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஜெயிலர் படத்தில் நடிக்க என்னை யாரும் கூப்பிடவே இல்லை”:சிவகார்த்திகேயன்

sivakarthikeyan-latest-speech-viral

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கொச்சியிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் தனி ஆளாக இருந்து படத்தை புரொமோட் செய்த சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலிங் நடிப்பதாக செய்திகள் வெளியானதே. அது உண்மையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் சிவகார்த்திகேயன், “நான் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார். அதையடுத்து முதலில் அப்படத்திலிருந்து என்னை யாரும் கூப்பிடவே இல்லை” எனவும் கூறி அச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

sivakarthikeyan-latest-speech-viral
sivakarthikeyan-latest-speech-viral