Sivakarthikeyan is a film actress who is paired with Surya
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. நடிகை பிரியங்கா ‘சூர்யா 40’ படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…