கணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல, ஹேம்நாதின் 10 ஆண்டுகால நண்பர் என்று கூறி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவரும், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கைதானவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்ய முடியாது. இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் சையது ரோஹித்துக்கு அடிப்படை உரிமை இல்லை. அதனால் அவரது மனுவை ஏற்க முடியாது” என்று கூறி மனுவை நிராகரித்தார்.

சித்ராவின் தந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,‘சித்ராவின் கழுத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடம் எதுவும் பதியவில்லை. அவரது உடலில் 2 இடங்களில் ரத்தக்காயம் உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, “சித்ரா தூக்குப்போட்டு மூச்சு திணறலால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பட்டுப்புடவையில் தூக்குப்போட்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை. மேலும் சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஹேம்நாத் திட்டியதால், அவர் தற்கொலை செய்ததாக நசரத்பேட்டை போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து, அதற்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Suresh

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

9 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

9 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

9 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

9 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

10 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

10 hours ago