Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தாச்சு, அவரே வெளியிட்ட பதிவு

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக மெமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக நலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவருக்கும் ஆர்த்தி என்பவருகும் திருமணம் ஆகி ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் பிறந்தனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் சிவகார்த்திகேயன். நேற்று இரவு 11 மணிக்கு தங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூன்றாவது குழந்தை மகன் எனவும் அம்மாவும் மகனும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது இரண்டு குழந்தைகளுக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் மூன்றாவது குழந்தைக்கும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.