Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான தகவல்,இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க போவதாகவும் நீண்ட நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அரசியல் சார்ந்த கதை களத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் முதல் முறையாக அரசியல் கதையில் நடிக்கப் போவதாக சொல்லப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sivakarthikeyan and venkat Prabhu movie update
Sivakarthikeyan and venkat Prabhu movie update