ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த மனோஜ். மீனா சொன்ன வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து அவமானப்படுத்தியதால் ரோகினி மனோஜ் ரூமுக்கு அழைத்துச் சென்று என்னானாலும் சரி இன்னைக்கு ஒரு வேலையோட தான் வீட்டுக்கு வரணும், இதனை request-ஆ ஆர்டர்-ஆ எடுத்துக்கிட்டாலும் சரி என்று சொல்ல மனோஜ் கண்டிப்பா வேலையோட வரேன் என்று கிளம்புகிறார்.

கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கும் மனோஜ் ஓவர் குவாலிபிகேஷன் என எல்லோரும் ரிஜெக்ட் செய்ய ஒரு இடத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்பதை பார்த்து ஹோட்டலுக்குள் நுழைகிறார்.

ஹோட்டலில் இருப்பவரிடம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று போர்டு போட்டு இருக்கீங்க என்ன வேலை என்று விசாரிக்க சப்ளையர் வேலை இருக்கு ஆர்டர் எடுக்கிற வேலை இருக்கு என்ற சொல்ல ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம் என கேட்டு தெரிந்து கொள்கிறார். அந்த நபர் யாருக்கு வேலை வேண்டும் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்காங்களா என்று கேட்க இல்ல எனக்கு தான் வேலை வேண்டும் என்று சொல்ல பார்த்தால் நிறைய படிச்சவன் மாதிரி இருக்க என்று கேட்க இல்லைங்க பத்தாவது தான் பாஸ் பண்ணி இருக்கேன் என்று பொய் சொல்கிறார்.

சப்ளையர் வேலை என்றால் கிச்சனுக்கும் இங்கும் அங்கும் ஓட வேண்டும் அதனால் ஆர்டர் எடுக்கிறது ஈஸி என்று மனோஜ் ஆர்டர் எடுக்கும் வேலையை தேர்வு செய்கிறார். வொர்கிங் டைம் என்ன என்று கேட்க காலைல 10 மணியிலிருந்து நைட் 10 மணி வரைக்கும் என சொல்லுகின்றனர். சரி நாளிலிருந்து வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்ல அதான் வந்துட்டியே இன்னைக்கு காலையில சேர்த்துக்க சாயங்காலம் நிறைய கஸ்டமர் வருவாங்க இன்று வேலையை செய்ய சொல்கிறார் ஓனர்.

இங்கே வீட்டுக்கு வந்த முத்து மீனாவை கூப்பிட்டு இன்னும் கடையில ஆள் இல்லாம இருக்கு எங்க இருக்க என்று கேட்க டிபனுக்கு மாவாட்ட வந்ததாக சொல்கிறார். அப்ப நான் போய் கடையில் நிக்கவா என்று கேட்க நீனா நீங்க போய் என்ன செய்வீங்க என்று திருப்பி கேட்க மாலை எடுத்துக் கொடுக்கிறேன், பூ கேட்டா முழம் போட்டுக் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

மீனா என் கையில போட்டா ஒரு முழம் அதுவே உங்க கையில போட்டா ஒன்றரை முழம் பூ அப்புறம் சீக்கிரம் பூ தீர்ந்து போயிடும் நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் என்று கூறுகிறார். இந்த நேரம் மனோஜ் அல்வாவோடு வீட்டுக்கு வர முத்து என்னடா சீக்கிரம் வந்துட்ட பார்க்கை மூடிட்டாங்களா என்று கேட்க எல்லாரையும் கூப்பிடும் மனோஜ் வேலை கிடைத்து விட்டதாகவும் முதல் நாள் சம்பளத்தில் அல்வா வாங்கி வந்ததாகவும் ரோகிணிக்கு கொடுக்கிறார்.

விஜயாவும் ரோகிணியின் சந்தோஷப்பட முதல் நாளே சம்பளம் கூலி வேலைக்கு அப்புறம் கூலிக்கு தான் டெய்லி சம்பளம் தருவாங்க, கம்பெனியில மாத கடைசியில் தானே சம்பளம் தருவாங்க எங்கேயோ இடிக்குதே என்று சொல்ல மனோஜ் இந்த கம்பெனி கொஞ்சம் வித்தியாசமான கம்பெனி தருவாங்க என்று கூறுகிறார்.

பிறகு ரோகிணி உள்ளே கூட்டிச்சென்று என்ன வேலை என்று கேட்க பெரிய வேலை கிடையாது தான் ஆனால் யாரையும் ஏமாத்தல பொய் சொல்லல என்று சொல்லும் மனோஜ் என்ன வேலை என்பதை மட்டும் சொல்லாமல் மறைக்கிறார்.

மறுநாள் மீனா கடையில் இருக்க பூ வாங்க வந்த ஒரு பெண்மணி உன் தாலி செயின் என்னாச்சு? மாமியார் வாங்கி வச்சுட்டாங்களா என்று கேள்வி கேட்க அப்படினா இல்லக்கா அவங்க அப்படி செய்யவும் மாட்டாங்க, என்ன ரொம்ப நல்லா தான் பாத்துக்குறாங்க. தாலி செயின் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருந்தது அதனால சரி பண்ண கொடுத்து இருக்கேன் என்று கூறுகிறார்.

சரி நீ நல்லா இருந்தா சந்தோஷம் தான் என்று அந்த பெண்மணி அங்கிருந்து கிளம்ப கீழே வரும் விஜயா மீனா எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்கேன், டிபன் செய்ய வேண்டாமா அவங்க எல்லாரும் வேலைக்கு கிளம்பி கிட்டு இருக்காங்க நீ இந்த பூக்கடையை பிடிச்சுகிட்டு இங்கேயே நின்னுட்டு இருக்க முதலில் இந்த கடையை தூக்கறேன் என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல என்ன மீனா உங்க மாமியாரை இப்படி பேசுறாங்க என்று கேட்க இல்லை அக்கா கடைக்கு வந்ததினால் வீட்டில் இருக்கும் வேலையை மறந்துட்டேன் அதான் சொல்லிட்டு போறாங்க என சமாளிக்கிறார். இதையெல்லாம் அண்ணாமலை தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-serial-episode-update
jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

14 hours ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

15 hours ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

16 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

16 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

16 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

16 hours ago