baakiyalakshmi-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி தனியாக ரூமில் இருக்க கண்ணன் கதவை தட்ட ராஜி கதவைத் திறந்ததும் உள்ளே வந்தவன் பேக்கை வைத்துவிட்டு ராஜியிடம் நெருங்கி போக அவனை தள்ளிவிடும் ராஜி தூக்கம் வருகிறது என பெட் மாறி உட்காருகிறார்.
திரும்பத் திரும்ப நெருங்கி வரும் கண்ணனால் கடுப்பாகும் ராஜி நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறோமா இல்லையா அதற்கான ஏற்பாடு பண்ணிட்டியா என்று கேட்க அதெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம் கோவிலில் போய் மாலை மாத்தி தாலி கட்டிக்க போறோம் என்று சொல்ல அதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது நிறைய ப்ரசிஜர் இருக்கு என்று கூறுகிறார்.
எல்லாத்தையும் பாத்துக்கலாம் நீ வந்து பக்கத்துல உக்காரு என்று ராஜியை கூப்பிட ராஜி கோபப்பட்டு அழ கண்ணனுக்கு நண்பன் போன் பண்ண திரும்பவும் பேக்கை எடுத்துட்டு போனால் சந்தேகம் வந்துடும் என்று சொல்லி கண்ணன் பேக்கை வைத்துவிட்டு வெளியே போக ராஜி சந்தேகத்துடன் அந்த பேக்கை திறந்து பார்க்க உள்ளே நகை பணம் என அனைத்தும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
கண்ணன் ரூமுக்கு வந்தது இதெல்லாம் எதுக்கு எடுத்துட்டு வந்த என்று சண்டை போட பணத்துக்காக தான் உன்னோட பழகுன உன்ன வெச்சி உன் வீட்டு மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம்னு நினைச்சேன், ஆனா அது முடியல சரி கிடைச்ச வரைக்கும் ஆட்டைய போட்டு ஒரு நாலஞ்சு நாள் சந்தோஷமா இருந்துட்டு போகலாம்னு பார்த்தேன் என்று தனது சுய ரூபத்தை காட்ட ராஜி அதிர்ச்சி அடைந்து நகையை கொடுக்க மாட்டேன் போலீஸ்க்கு போறேன் என்று வாக்குவாதம் செய்கிறார்.
அண்ணன் ராஜியை பிடித்து தள்ளிவிட்டு நகை தூக்கிக்கொண்டு எஸ்கேப்பாக ராஜியும் அவனைத் துரத்தி கொண்டு செல்ல இதை பார்த்த பாக்யா பின்னாடியே ஓடுகிறார். பிறகு எழிலும் உதவிக்கு வந்து விட கண்ணன் காரில் ஏறி எஸ்கேப் ஆகி விடுகிறான்.
மறுபக்கம் கோமதிக்கு பழனி போன் செய்ய வீட்டு நிலவரம் குறித்து கேட்க முத்துவேல் தற்கொலை செய்து கொள்ளப் போன விஷயத்தை சொல்ல கோமதி அதிர்ச்சி அடைகிறார். பாக்யா ராஜியை அழைத்து வந்து ரூமில் உட்கார வைத்து சமாதானம் செய்து என்னாச்சு என்று கேட்க ராஜி நடந்தவற்றை சொல்கிறார்.
சரி உன்னுடைய அப்பா அம்மா யாரு எங்க இருக்காங்க அவங்களுடைய போன் நம்பர் குடு அவங்கள அனுப்பி விடுகிறேன் என்று சொல்ல ராஜி மறுத்துவிடுகிறார். நான் உயிரோடவே வாழ கூடாது செத்துப் போகணும் என்று எழுந்து செல்ல பாக்யா பிடித்து உட்கார வைக்கிறார்.
மறுபக்கம் கோமதி பழனி சொன்னதை நினைத்து புலம்ப மீனா எனக்கு தெரிஞ்சு ராஜி அப்படி பண்ற பொண்ணு இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்க கதிர் அவளை பத்தி எதுக்கு பேசிகிட்டு இருக்கீங்க என்று கோபப்பட மீனா உங்களுக்கு ஏதோ உண்மை தெரிந்திருக்கு என்ன விஷயம் சொல்லுங்க என்று கேட்க ராஜி கண்ணன் என்றவனை லவ் பண்ண விஷயத்தை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இங்கே பாக்கியா ராஜியை தங்களது ரூமில் தங்க வைத்து மறுநாள் உறவினர்கள் குறித்து தகவலை வாங்கி குடும்பத்தோடு சேர்த்து விட வேண்டும் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…