‘Jailer 2’ Eyes Vinayaka Chaturthi Release
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற பல முக்கிய நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்தாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 10 அல்லது 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், அடுத்தாண்டின் மிகப்பெரிய திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…