sirakadikka-aasai-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செல்வம் மலேசியா மாமாவிடம் சரக்கு கேட்க அவர் 5 பாட்டில் வாங்கிட்டு வந்திருந்தேன் என்று சொல்ல சரி வாங்க வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்துடலாம் என்று செல்வம் சொல்கிறார்.
ஆனா வெளி நாட்டில் இருந்து இரண்டு பாட்டில் தான் எடுத்துட்டு வரணும் நான் அஞ்சு பாட்டில் எடுத்துட்டு வந்ததால இன்கம் டேக்ஸ் ஆபிஸ் புடிங்கிட்டாங்க என்று சொல்ல இன்கம் டேக்ஸ் ஆபிஸஸ் எதுக்கு இதெல்லாம் புடுங்குறாங்க என்று கேள்வி கேட்க டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு, கஸ்டம்ஸ் ஆஃபீஸ் புடுங்கிட்டாங்க என்று சொல்கிறார்.
அதோடு வெளியூர் சரக்க விட நம்ம ஊர் சரக்குதான் ரொம்ப நல்லா இருக்கும் கிடைக்குமா என்று சொல்ல முத்து சரக்குக்கு ஏற்பாடு செய்ய தண்ணியே கலக்காமல் மடக்கு மடக்குனு குடிக்கிறார் மலேசியா மாமா.
மனோஜ் இதெல்லாம் வேணாம் மாமா வாங்க போலாம் ரோகிணி திட்டுவா என்று சொல்ல பாப்பா கிட்ட நான் சொல்லிக்கிறேன் என்று மனோஜையும் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து வலுக்கட்டாயமாக சரக்கை ஊற்றி விடுகிறார் மாமா. இதனால் முத்து அவனுக்கு எதுக்குயா ஊத்துன என்று திட்டுகிறார்.
மனோஜ் அப்படியே தடுமாறிக் கொண்டே அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி விட என் பெயர் என்ன தெரியுமா என் ஊர் என்ன தெரியுமா என மாமா உண்மையை உலர தொடங்க முத்து சொல்லுங்க சொல்லுங்க என்று கேட்க கடைசியில் மட்டையாகி விடுகிறார்.
தடுமாறி வந்த மனோஜ் ஓரிடத்தில் மட்டையாகி விட முத்துவும் செல்வமும் மலேசியா மாமாவை கூட்டிக் கொண்டு வரும்போது வழியில் மனோஜ் படுத்து கிடப்பதை பார்த்து அவரையும் வீட்டிற்கு கூட்டி வருகின்றனர். மனோஜ் வீட்டிற்கு அழைத்து வந்து சேரில் உட்கார வைக்க விஜயாவும் ரோகிணியும் என்னாச்சு என்று கேட்க மனோஜ் அப்படியே சிலை போலவே இருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…