sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுக்கு இவர்கள் வந்திருக்க அவரது அம்மா சமாளித்துக் கொண்டிருக்க கிரிஷ் ஏரோபிளேன் எடுத்து மனோஜிடம் காட்டி என்கிட்ட ஏரோபிளேன் இருக்கு உங்க கிட்ட இருக்கா என்று கேட்கிறான். எங்க அத்தை வாங்கி கொடுத்தாங்க என்று சொல்ல மீனா யாருமா உங்க பொண்ணு துபாயில் இருந்து வந்து இருக்காங்களா என்று கேட்க இல்லமா வேற ஒரு பொண்ணு வந்து போனா அது தான் சொல்றான் என்று சமாளிக்கிறார். உடனே கிரிஷ் கல்யாணி அத்தை பாட்டி என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு ரோகிணியின் போட்டோவை காட்டி இவங்களை இங்கே எங்கேயாவது பார்த்தீர்களா என்று விசாரிக்க அவர் இங்கு பார்க்கவில்லை என்று சொல்கிறார். முத்து இதுக்கு மேல எங்க போய் தேடறது அவ்வளவு தான் என்று சொல்ல மனோஜ் என்ன முழுசா நம்பின ரோகிணியை நான் ஏமாத்திட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன். என் பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன் என் அம்மாவுக்கு அப்புறமா என் மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தது ரோகிணி தான் அவ இல்லாம இனிமே என்ன பண்ண போறேன் என கண் கலங்கி அழுகிறார்.
ரோகினியின் அம்மா கவலைப்படாதீங்க தம்பி அவங்க கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுவாங்க என்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு முத்து உனக்கும் பொண்ணுங்களுக்கும் செட்டே ஆகல பேசாம காசிக்கு போயிடு என நக்கல் அடிக்கிறார்.
மீனா கொஞ்ச நேரம் சும்மா இருங்க வீட்டுக்கு போகலாம் கண்டிப்பா அவங்களே கோபம் தணிந்து வந்துருவாங்க என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் ரோகினியின் அம்மா மாப்பிள்ள சொக்கத்தங்கம் செஞ்ச தப்புக்காக கவலைப்படுறாரு, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, அதை கெட்டியா பிடிச்சுக்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மனோஜ் வீட்டுக்கு வந்ததும் அம்மாவை பிடித்து ரோகிணி எங்கனு தெரியலை என அழ விஜயா ரோகினி வந்துவிட்டார் என்று சொல்ல முயற்சி செய்ய மனோஜ் சொல்ல விடாமல் அழுது கொண்டே இருக்கிறார். எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் இவனால் தான் ரோகிணி என்னை விட்டு போயிட்டா என்று அழுகிறார். முத்து உனக்காக டீசல் போட்டு வந்தேன் பாரு, நன்றியே இல்லடா உனக்கு என்று பேச ரூமுக்குள் இருந்து ரோகினி வெளியே வந்து போதும் நிறுத்துங்க என சத்தம் போடுகிறார்.
வீட்ல இருந்துட்டு தான் எங்கள அலைய விட்டயா கோபப்படுகிறார் முத்து. என் புருஷன பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது என சொல்ல அவன் உன்னை ஏமாத்தி இருக்கான் என்று முத்து சொல்ல அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு என்ன நஷ்டம் என ரோகிணி கேள்வி கேட்கிறார்.
அதன் பிறகு அண்ணாமலையிடம் இனிமே அவர பத்தி யாரும் எதுவும் பேசக்கூடாது நீங்க கேள்வி கேளுங்க உங்களுக்கு அந்த ரைட்ஸ் இருக்கு ஆனா மத்தவங்க அவரை அவமானப்படுத்தி பேசுவதை பார்க்க முடியாது. அப்படி யாராவது பேசினால் இனிமே நாங்க இந்த வீட்ல இருக்க மாட்டோம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…