கணேஷை எச்சரித்த எழில். ஈஸ்வரி சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் லாயர் வீட்டுக்கு வந்திருக்க அவர்கள் செழியன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக எடுத்துச் சொல்கின்றனர்.

அதனை தொடர்ந்து லாயர் உங்களுக்கு ஜெனி மேல ஏதாவது குற்றச்சாட்டு இருக்கா என்று கேட்க செழியன் பாக்கியம் எதுவும் இல்லை என்று சொல்ல ஈஸ்வரி நான் சொல்றேன் எழுதிக்கோங்க என்று ஜெனியை பற்றி தப்பு தப்பாக சொல்கிறார். மேலும் அவங்க அப்பா அம்மாவுக்கு ஜெனி மேல அக்கறையே கிடையாது என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் செழியன் இதெல்லாம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று லாயரிடம் சொல்ல அப்படின்னா ஈஸியா விவாகரத்து கெடச்சிடும் என சொல்கிறார்.

செழியன் எது நடந்தாலும் பரவாயில்லை ஜெனி மேல எந்த தப்பும் சொல்ல முடியாது என சொல்லி விடுகிறார். இதனால் ஈஸ்வரி கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார். அதன் பிறகு எழில் கோவிலுக்கு வர கணேஷ் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்திருப்பதை எழில் கண்ணாடியில் பார்த்துவிட்டு அமிர்தாவையும் நிலாவையும் கோவிலுக்குள் அனுப்பி வைத்துவிட்டு கணேஷை சந்தித்து எச்சரிக்கிறார்.

நான் அமிர்தா நிலாவுக்காக எந்த எல்லைக்கு வேணாலும் போவேன் இன்னொரு முறை இப்படி ஃபாலோ பண்ணி வந்த உன்னை உயிரோட புதைச்சிடுவேன் என்று மிரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து கோபி மற்றும் ராதிகா பங்ஷனுக்கு போயிட்டு வந்து கொண்டிருக்கும் போது ராதிகா காலையில் என்ன சொன்னீங்க என் ஆபீஸ் வந்து பிக்கப் பண்ணிக்கிறதா சொல்லிட்டு நீங்க ஏன் வரல என்று கேட்க மீட்டிங் நிறைய இருந்தது அதனால நேரமே இல்லை என்று சொல்கிறார்.

மீட்டிங் எங்க நடந்தது என்று கேட்க கோபி நம்ப ஆபீஸ்ல தான் என அழுத்தமாக சொல்ல நான் உங்க ஆபீஸ் வந்தேனே அங்கே யாருமே இல்லையே என அதிர்ச்சி கொடுக்கிறார் ராதிகா. உடனே கோபி சாரி நம்ப ஆபீஸ்னா நம்முடைய ஆஃபீஸ்ல இல்ல, கிளைண்ட்டோட ஆபீஸ் என கூறுகிறார்.

மத்தவங்க எல்லாம் ஆபீஸ்ல வேலை பண்ற ஒருத்தரோட வீட்ல பங்க்ஷன் அங்க போய்ட்டாங்க என்று சமாளிக்கிறார். எனக்கு உன் மேல அக்கறை இருக்கு உனக்கு கொடுத்த கமிட்மெண்ட்டை நிறைவேற்ற வேண்டும் என்று தான் நான் இங்க வந்துட்டேன் என்று சொல்லி சமாளிக்க ராதிகாவும் உருகி விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் நிலா ஈஸ்வரியிடம் வந்து வாங்க பாட்டி விளையாடலாம் என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்க ஈஸ்வரி அமிர்தாவை கூப்பிட்டு நிலாவ மேல தூக்கிட்டு போ என சொல்கிறார். நீ பாட்டி பாட்டினு பாசத்தைக் காட்டி அப்புறம் திடீர்னு கிளம்பி போயிட்டேனா என்னால தாங்க முடியாது என ஈஸ்வரி சொல்ல அமிர்தா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அதிரடிப் படத்தில் யார் ஹீரோ?

பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…

1 day ago

திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…

1 day ago

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என தலைப்பு அறிவிப்பு!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…

1 day ago

ஹபீபி- திரை விமர்சனம்

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…

1 day ago

ஆட்டி – திரை விமர்சனம்

மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…

1 day ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

1 day ago