“Don’t Make Us Erase the Fort Like Parotta Soori!” – Actor Mansoor Ali Khan’s Remark
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “இது என்ன அநியாயம்? விஜயை அழைத்து முதல்வர் இருக்கையில் உட்கார வையுங்கள். நாட்டில் எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை. ஆட்டுக்கு தாடி தேவையில்லாதது போல, நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்த கவர்னர் வந்தாலும் இதே நிலைதான் தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “இனி உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூலமாகவே பதவிப்பிரமாணம் நடத்த வேண்டும்” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பரிசம் போட்டு நிச்சயதார்த்தம் செய்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் நடத்துவது போல, தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் இன்னும் ஆட்சியமைக்கவில்லை. இப்படியே சென்றால் பரோட்டா சூரி காமெடி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க. மீண்டும் தேர்தல் வைத்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…