விஜயா செய்த வேலை.அண்ணாமலை கொடுத்த ஷாக்.சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா நான் சமைக்கிறேன் என சொல்ல பாட்டியும் சரி சமை என்று சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து விஜயா சமைக்க போக அங்கு காஸ் இல்லாமல் இருப்பதை பார்த்து எங்க கேஸ் அடுப்பை காணும் வேற எங்கேயாவது எடுத்து வச்சுட்டியா மீனா என்று கேட்க அங்க விறகு அடுப்பு இருக்கு அதுல தான் சமைக்கணும் என பாட்டி சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். இதுல எப்படி சமைக்கிறது என மீனாவிடம் கேட்க மீனா சொல்லி கொடுக்க விஜயா அதேபோல் சமைக்கிறார்‌‌. அனல் வீசுதே என சொல்ல தீய கம்மி பண்ணுங்க என்று மீனா சொல்கிறார். அது எப்படி பண்ணனும் என்று கேட்க அந்த பெரிய விறகு வெளியே இழுங்க என சொல்ல அதுக்கு பதிலா இப்படி பண்ணலாம் என விஜயா தண்ணீரை தூக்கி அடுப்பில் ஊற்ற மொத்தமாக அணைந்து போகிறது. சரி நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என மீனா சொன்னதும் எல்லா வேலையும் முடிச்சிட்டு நீ தான் பண்ணனும் சொல்லக்கூடாது நான் பண்ணதா சொல்லு என சொல்லிவிட்டு விஜயா வெளியே போகிறார்.

இதையெல்லாம் பார்த்த முத்து அம்மா காரணம் இல்லாம இதெல்லாம் செய்ய மாட்டாங்க எதுக்காக வந்தாங்க ஏன் இதெல்லாம் செய்றாங்க என்ன ஒவ்வொருத்தராக கேட்க யாரும் பதில் சொல்லாததால் சாமியிடம் சென்று உங்களுக்காக தெரியுமா பதில் சொல்லுங்க என முட்டிக் கொள்கிறார்.

பிறகு விஜயா பார்வதி போன் பண்ணி இருக்க திருப்பி போன் பண்ணி பேசும்போது என்னால முடியல காலையிலிருந்து எவ்வளவு வேலை தான் செய்கிறது. இந்த மீனா வேற எனக்கு என்னவோ மாமியார் மாதிரி என்னை போட்டு வேலையா வாங்குகிறான் என்று சொல்ல பணத்துக்காக இறங்கி போய் தான் ஆகணும் என பார்வதி செல்கிறார்.

மறுபக்கம் மனோஜ் இது முறையும் இன்டர்வியூக்கு சென்று அங்கு எல்லாம் பெண்களாக இருந்ததால் வந்துவிட்டதாக சொல்ல ரோகிணி அவருக்கு அறிவுரை சொல்ல அவர் நான் வேலை செய்கிற கம்பெனியில் எம்டி லேடியா இருக்கக்கூடாது, அவங்க கணவர் அங்க வேலை செய்யக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். பிறகு ரோகிணி சரி மும்பை ஆபீஸ் ஒன்னு இருக்கு அங்க போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுங்க என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து மனோஜ் கிளம்பியதும் இவர் என்ன வேலைக்கு போக மாட்டார் போல என ரோகிணியின் தோழி சொல்ல அவர் போல நானும் பரவால்ல அவரோட இருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு அவருக்கும் சேர்த்து நானே சம்பாதிக்கிறேன் என பேசுகிறார்.

இங்க மீனா கால் வலிக்குது என பாட்டி சொன்னதும் அவருக்கு கால் பிடித்து விட அண்ணாமலை இதை பார்த்துவிட்டு விஜயாவை அழைத்து அங்க பார் உனக்கும் மீனாவுக்கும் இங்கே சிறந்த மருந்தாக போட்டிதான் நடந்திட்டு இருக்கு மீனா ஜெயிச்சுட்டா உனக்கு பணம் கிடைக்காது, போய் அம்மாவோட கால அமுத்து என சொல்கிறார். எனது நான் அவங்க கால அமுக்கணுமா என கேட்க பணத்தை அமுக்க தான் வந்தேன் அப்போ போய் காலை அமுக்கு என்று சொல்ல சரி போறேன் என விஜய் வந்து பாட்டிக்கு கால் அமுக்கி விடுகிறார்.

அப்போது பாட்டி மனோஜ் கல்யாண செலவுக்கு பணம் இருக்கா என்று கேட்க அண்ணாமலை சிம்பிளா தானே பண்ண போறோம் அதெல்லாம் பாத்துக்கலாம் பணம் ஏதும் தேவையில்லை என சொல்ல இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

20 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

20 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

21 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

21 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

21 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

21 hours ago