Bhagyaraj Passes Away 17 Days After Bharathiraja's Demise
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1979-ஆம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், பின்னர் நடிகர், இயக்குநர், கதை, திரைக்கதை மற்றும் வசன ஆசிரியர் என பல்வேறு துறைகளில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார். 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி, குடும்பக் கதைகள், இயல்பான நகைச்சுவை மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளால் ரசிகர்களின் மனதில் அழியாத இடம்பிடித்தார்.
சமீபத்தில் திரைத்துறையில் தனது 50 ஆண்டுகால சாதனையை நிறைவு செய்ததை முன்னிட்டு அவருக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் முக்கியமானவர் அவரது குருவும், புகழ்பெற்ற இயக்குநருமான பாரதிராஜா.
பாக்யராஜ் தனது திரைப்பயணத்தை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தொடங்கினார். ’16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவமே, பின்னர் அவரை வெற்றிகரமான இயக்குநராகவும் நடிகராகவும் உயர்த்தியது.
வயது மூப்பு காரணமாக இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த 10-ஆம் தேதி காலமான நிலையில், அவரது மறைவின் சோகம் இன்னும் மறையாத சூழலில், வெறும் 17 நாட்களிலேயே அவரது அன்பு சீடரான பாக்யராஜும் உயிரிழந்துள்ளார். குரு-சிஷ்யர் இருவரையும் குறுகிய கால இடைவெளியில் இழந்துள்ள தமிழ் திரையுலகம், இந்த இரட்டை இழப்பால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…