ஈஸ்வரியை மிரட்டிய ராதிகா.கோபத்தில் ராதிகா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவிடம் சத்தம் போட்டு கொண்டிருக்க இங்கு வரும் ராதிகாவின் அம்மா என்ன சத்தம் ஓவரா இருக்கு போலீஸ் வந்துட்டு போனது, சொன்னதெல்லாம் ஞாபகம் இல்லையா? என்ன திரும்ப வர சொல்லனுமா என சத்தம் போட ஈஸ்வரி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இவ பண்ணிக்கிட்டது ஒரு வெக்கம் கெட்ட கல்யாணம், இத பாக்க அண்ணன், அண்ணி வேற இங்க வந்து இருக்காங்க என்று பேச என்னம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க என ராதிகாவின் அண்ணா கேள்வி கேட்க தங்கச்சி தப்பு பண்ணா நீ பண்றது தப்பு என எடுத்து சொல்லணும் அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்க நீ எல்லாம் ஒரு அண்ணனா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

முதல்ல இவ வந்தா பின்னாடியே இவ பொண்ணு வந்தா இப்போ நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க என்று ஈஸ்வரி கோபப்பட இங்க வருவோம், எத்தனை நாள் வேணாலும் இருப்போம் அதையெல்லாம் நீங்க கேட்கக்கூடாது என ராதிகாவின் அம்மா பதில் சொல்ல உங்க திட்டம் இப்ப புரிஞ்சு போச்சு முதல்ல கோபியை ஏமாத்தி கல்யாணம் பண்ணீங்க, இப்ப எல்லாரும் இங்க வந்து உட்கார்ந்து கோபியை ஏமாத்தி இந்த வீட்டையும் எடுத்துக்க பாக்குறீங்க என ஷாக் கொடுக்கிறார்.

இவ இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கும் போதே இவ்வளவு ஆட்டம் ஆட்றா இன்னும் ஒழுங்கமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருந்தா என ஈஸ்வரி சொல்ல ராதிகா ஏய் என சத்தம் போட்டு அவ்வளவு தான் மரியாதை, என்ன பகைச்சிகிட்டு யாரும் இந்த வீட்டுல இருக்க முடியாது. அமைதியா இருக்கிறதா இருந்தா இந்த வீட்ல இரு, இல்ல கிளம்பி போயிட்டே இரு என மரியாதை இல்லாமல் பேச ஈஸ்வரி உடைந்து போய் உட்கார எல்லாரும் பதறுகின்றனர்.

பாக்கியா அத்தை என்ன ஆச்சு என ஓடிவர என்ன இன்னும் ஆள காணோம் என்று பார்த்தேன் பர்பாமென்ஸ் பண்ண வந்துட்டீங்களா என பாக்கியாவையும் ராதிகா வம்புக்கு இழுக்க பாக்கியா ராதிகாவுக்கு பதிலடி கொடுத்து ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என ராதிகா கேட்க அவருடைய அம்மாவும் நீ மன்னிப்பெல்லாம் கேட்காத ராதிகா என ஏத்தி விடுகிறார்.

பிறகு ராதிகாவின் அண்ணனும் அண்ணியும் நாம இன்னமும் இங்கு இருந்தா பிரச்சனை அதிகமாத்தான் ஆகும் இது ராதிகா புகுந்த வீடு, அவ நல்லபடியா வாழனும் என சொல்லி அம்மாவை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுகின்றனர். பிறகு ராதிகா உங்களுக்கு சந்தோஷமா என் குடும்பத்தோட கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தேன் அதை சண்டை போட்டு கெடுத்துட்டீங்க உங்க கிட்ட எல்லாம் பேசவே முடியாது என சொல்லி மேலே சென்று விடுகிறார்.

அதன் பிறகு கோபி வீட்டுக்கு வர ராதிகா வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா அத்தை பேசினது மட்டும் சொல்றீங்களே நீங்க அத்தையை ஒருமையில் பேசினது, வீட்டை விட்டு போக சொன்னது எல்லாம் சொல்ல வேண்டியதுதானே என கேட்க அதைக் கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு என கோபி பாக்யாவை கேள்வி கேட்கிறார்.

பாக்கியா பேசுனது உங்க அம்மாவை கேள்வி கேட்க வேண்டியது நீங்கதான் நீங்க கேட்கல நான் கேட்கிறேன் என பதிலடி கொடுக்கிறார். இந்த வீட்ல இருக்கவே உனக்கு உரிமை இல்லை இதுல பேச எங்க உரிமை இருக்கு என ராதிகா கேள்வி கேட்க என்ன உரிமை இல்லை இந்த வீட்டை எனக்கு விக்கிறதா சொல்லி இருக்காரு. 20 லட்சம் ரூபாய் பணத்துல 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இருக்கேன், சும்மா உரிமையில்லைன்னு சொல்லாதீங்க என்று சத்தம் போடுகிறார்.

உடனே கோபி 18 லட்சம் ரூபா பணத்தை கொடுக்கவில்லை கொடுத்த பிறகு பேசு என சொல்ல அதெல்லாம் இவங்க எங்க இருந்து கொடுக்கப் போறாங்க என ராதிகா நக்கல் அடிக்க கொடுத்ததும் என்ன பண்ணுவீங்க இந்த வீட்டை விட்டு போயிடுவீங்களா என கேட்டு பாக்கியா அதிர்ச்சி கொடுக்கிறார். நீ பண்ற மசாலா கேட்டரிங் வேலை எல்லாம் வெச்சு அந்த பணத்தை கொடுக்க முடியாது என கோபி சொல்ல நான் என்னமோ பண்றேன் பணத்தை கொடுத்தா என்ன பண்ணுவீங்க அதுக்கு பதில் சொல்லுங்க, வீட்டைவிட்டு வெளியே போகிறீர்களா? என கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update

jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

20 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

20 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

20 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

20 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

20 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

20 hours ago