முத்துவை கிண்டல் அடித்த பாட்டி.ஷாக்கான அண்ணாமலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவை கையில் தூக்கி வர பாட்டியும் அன்னம் அக்காவும் முத்துவுக்கு பொண்டாட்டி மேல எவ்வளவு ஆசை என கிண்டல் அடிக்க முத்து அவளுக்கு காலில் அடிபட்டு இருக்கு என்ற விஷயத்தை சொல்ல இருவரும் பதறுகின்றனர். என்னாச்சு என்று விசாரித்து உள்ளே கூட்டி சென்று ஒரு சேரில் உட்கார வைத்ததும் பாட்டி மீனாவுக்கு உத்தடம் கொடுக்கிறார்.

அப்போது மீனாவிடம் உனக்கும் முத்துவுக்கும் இன்னும் எதுவும் நடக்கலன்னு எனக்கு நல்லாவே தெரியுது என்று சொல்ல மீனா நான் அவர நெருங்கி போனாலும் அவர் என்னை காயப்படுத்தற மாதிரி எதையாவது சொல்லிடுறாரு என்ன பண்ணுறது என்று வருத்தப்பட நீங்க ஊருக்கு போகும் போது இரண்டு பேரும் நல்ல புருஷன் பொண்டாட்டியா தான் ஊருக்கு போவீங்க அதுக்கான ஏற்பாடுகளை நான் பண்றேன் என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.

பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை வீட்டுக்கு வர முத்துவும் உள்ளே இருந்து வெளியே வந்து அப்பா எப்போ வந்தீங்க என்ன ஏது என விசாரிக்க விஜயா வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க அங்க பாருங்க யார் வந்து இருக்கா என்று அண்ணாமலை சொன்னதும் விஜயா நின்று கொண்டிருப்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாட்டி உண்மையாகவே விஜயாவா வந்திருக்கா என்று கேட்க முத்து அம்மா எப்படி வந்தாங்க? அதெல்லாம் வர மாட்டாங்களே என்று கேட்க அண்ணாமலை அதான் வந்துட்டாளே என்று சொல்ல பிறகு பாட்டி விஜயாவை கூப்பிட்டு உட்கார வைக்கிறார். விஜயா பாட்டி முன்னாடி மீனா மேல அக்கறை இருப்பது போல அப்படியே நடிக்க முத்து அதை கண் சிமிட்டாமல் பார்த்து வியக்கிறார்.

பிறகு முத்து அம்மா வந்ததுக்கு ஏதோ காரணம் இருக்கு என்று அண்ணாமலையிடம் கேட்க அவர் ஊருக்கு வரியானு கேட்டேன் வரேன்னு சொன்னா கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்லி சமாளிக்க முத்து இது காரணம் கிடையாது என பாட்டியிடம் சென்று கேட்க அது என்னவோ அவ வந்து இருக்கா அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்லுகிறார்.

பிறகு அன்னம் அக்காவிடம் போய் எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியுமா என்று கேட்க அவங்களும் தெரியலையேப்பா முத்து என்று சொல்ல மீனா மீனா சத்தம் போட்டுக் கொண்டே முத்து ரூமுக்கு வந்து அம்மா எதுக்கு வந்து இருக்காங்க? உன்னை வேற ரொம்ப நல்லா பார்த்துக்கிற மாதிரி நடிக்கிறாங்க நீ தான் புத்திசாலி பொண்ணாச்சே யோசித்து சொல்லு என்று கேட்க மீனா தெரியலையே வந்து இருக்காங்க அதுவரைக்கும் சந்தோஷம்னு சொல்ல முத்து படுத்துட்டு தூங்கு என கோபப்பட்டு விட்டு வெளியே வந்து விடுகிறார்.

அதை தொடர்ந்து விஜயா தோப்பில் நின்று ஏதோ யோசித்துக் கொண்டிருக்க அண்ணாமலை அங்கு வர விஜயா அதான் வந்துட்டேன்ல உங்க அம்மாகிட்ட பணத்தை கேளுங்க என்று சொல்ல நான் எதுக்கு கேக்கணும்? நீ உன்னுடைய கௌரவத்துக்காக ரோகினிக்கு நகை போட போற அப்போ நீ தான் பணம் கேட்கணும் என்று சொல்ல நான் கேட்டா தருவாங்களா என விஜயா கேள்வி கேட்கிறார்.

நீ கேட்டா தர மாட்டாங்க ஆனா அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல மருமகளா நடந்துக்க என்று சொல்ல நல்ல மருமகளாகவா அது எப்படி என்று விஜயா கேள்வி கேட்க அது சரி அதெல்லாம் உனக்கு எப்படி தெரிய போகுது என்று அண்ணாமலை நக்கல் அடிக்கிறார்.

மேலும் வேணும்னா மீனா கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கத்துக்க என்று சொல்ல நான் எதுக்கு அவகிட்ட கத்துக்கணும்? என்று விஜயா கோபப்பட பணம் வேணும்னா நீ நல்ல மருமகளா நடந்து தான் ஆகணும் என ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago