கண்கலங்கிய பாக்யா.கோபி காத்திருந்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியிடம் கோபி வந்து பேசுனதுக்காக மன்னிப்பு கேட்க அதெல்லாம் நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளல அவருக்கு இன்னமும் உங்க மேல காதல் இருக்கு என்று சொல்கிறார்.

உடனே பாக்யா புன்னகைக்க என்னங்க சிரிக்கிறீங்க என்று கேட்க செழியன் சின்ன வயசா இருக்கும்போது ஒரு பொம்மை கார் வாங்கிக் கொடுத்தோம். அதுக்கப்புறம் எடுத்து அதை ஒரு கப்போர்ட்ல வச்சுட்டான் அதை யாரும் திரும்பி கூட பார்க்கல ரொம்ப நாள் அது அதே கப்போர்ட்ல தான் இருந்தது. ஒரு நாள் வீட்டை கிளீன் பண்ணும் போது நான் அதை எடுத்து பரன் மேல போட்டுட்டேன். அதுக்கப்புறம் எல்லாரும் எங்க அந்த கார் எங்க என கேட்டாங்க, அதே மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையும்.

நான் அவரோட இருக்கும்போது ஒரு நாள் கூட அவர் என்கிட்ட சந்தோஷமா பேசினது கிடையாது, என்னை ஒரு பொருள் மாதிரி தான் நடத்துனாரு, பாக்கியானு பெயர் சொல்லி கூட கூப்பிட்டது கிடையாது எப்பவும் இடியட் தண்டம் முண்டம்னு தான் கூப்பிடுவாரு என்று சொல்லி கலங்குகிறார்.

அதன் பிறகு அமிர்தா அம்மாவுடன் ஃபோனில் பேச அவரது அப்பாவுக்கு சிறிய ஆக்சிடென்ட் என்று சொல்ல போக முடியாத தூரத்தில் இருக்கோம் என கண்கலங்க எழில் நான் உங்களை கூட்டிட்டு போறேன் என சொல்லி அமிர்தாவை ஊருக்கு கிளம்ப தயாராக சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரி டைனிங் டேபிளில் அமர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டிருக்க ராதிகா அங்கு வர உடனே ஈஸ்வரி பாக்யாவிடம் என்ன குழம்பு என கேட்க அவர் சிக்கன் குழம்பு என்று சொல்ல கோபிக்கு சிக்கன் குழம்புனா ரொம்ப பிடிக்கும் அதுவும் நீ வெக்கிற சிக்கன் குழம்புனா எக்ஸ்ட்ரா சாப்பிடுவான் என்று சொல்லி ராதிகாவை வெறுப்பேற்றுகிறார்.

அதற்கேற்றார் போல கோபி கிச்சனுக்கு வந்து சிக்கன் குழம்பு வாசனை ஆளை தூக்குது என ஆஹா ஓஹோ என்று ராதிகா சமைத்ததாக நினைத்து பேச ராதிகா இன்னும் கடுப்பாகி சப்பாத்தி கட்டையை தூக்கி போட கோபி பயந்து போய் நான் நீ சமைச்சதுனு நெனச்சேன், சாரி என்று சொல்லி ரூமுக்குள் ஓடி விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி புடிச்ச சாப்பாட்டை சாப்பிடவும் முடியல, அவன் வாழ்க்கையில சந்தோஷமும் இல்லை நல்ல வாழ்க்கையை விட்டுட்டு ஓடிப்போனான்ல அவனுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை என ஈஸ்வரி பேசிவிட்டு எழுந்து செல்ல ராதிகா வழக்கம் போல பாக்யாவிடம் சண்டை போடுகிறார்.

ஒரு சமையலை வச்சு அவரை இம்ப்ரஸ் பண்ணிடலாம்னா அந்த அளவுக்கு வீக்காவா இருக்கு உங்க ரிலேஷன்ஷிப் என பாக்கியா ராதிகாவுக்கு பதிலடி கொடுக்கிறார். நீங்க என்கிட்ட சண்டை போடுறத விட்டுட்டு உங்க புருஷன் எதுக்கு மத்த பொம்பளைங்க என்ன பண்றாங்க என்று பார்க்கிறத நிறுத்த சொல்லுங்க என பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.

பயங்கர கோபத்துடன் ராதிகா மேலே வர கோபி சாரி கேட்க குழம்ப பார்த்ததும் அப்படி ஓடிப் போயிட்டீங்க நான் என்ன உங்களுக்கு சமைச்சு கொடுக்காமலையாய் இருக்கேன், எனக்கு உங்க வீட்டு கிச்சன்ல கொடுக்கிறது பத்து நிமிஷம் தான், அதுல உங்களுக்கு சிக்கன் குழம்பு வேற சமைச்சு கொடுக்கணுமா? என்ன என்னை அசிங்கப்படுத்தறீங்களா? என கோபப்படுகிறார்.

என்னைக்காவது ஒரு நாள் நான் சமைத்த சாப்பாடு நல்லா இருக்கு வாசனையா இருக்குன்னு சொல்லி இருக்கீங்களா என்று கேட்க கோபி மெதுவாக நல்லா இருந்தா சொல்ல மாட்டேனா என்று சொல்ல இதைக் கேட்டு விடும் ராதிகா அவரை அடி வெளுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago