ரோகினி போட்ட திட்டம். அதிர்ச்சியில் பாட்டி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா காலையில் எழுந்து சாணி தெளித்து கோலம் போட அதை பார்த்த அண்ணம்மா இதையெல்லாம் நீ ஏம்மா பண்ற என்று கேட்க சென்னையில காலையில அஞ்சு மணிக்கு எழுந்து இதையெல்லாம் பண்ணிடுவேன். இங்கு பாட்டி வீட்டுல கோலம் போடணும்னு ஆசையா இருந்துச்சு அதான் போட்டேன் என்று சொல்கிறார்.

அதன் பிறகு உள்ளே போன மீனா நேராக விளக்கேற்ற அதை பார்த்த அன்னம்மா என்னம்மா மீனா குளிக்காம கொள்ளாம விளக்கேத்துது ஏதோ தப்பா தெரியுது என்று சொல்ல பாட்டி முத்து மீனாவின் ரூமை திறந்து பார்க்க முத்து கீழே படுத்து தூங்குவதை பார்த்து இருவருக்கும் இடையே எதுவும் நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்கிறார். இதனால் அவர் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு மனோஜ் ரோகினி வீட்டுக்கு வர ரோகிணி அவரை வரவேற்று உட்கார வைக்க மனோஜ் தலை வலிக்குது என்று சொல்ல ரோகிணி மசாஜ் செய்துவிட தனக்கு வேலை போன விஷயத்தை சொல்ல ரோகிணி எப்படி என்னாச்சு என்று கேட்க ஆபீஸில் நடந்த அனைத்தையும் சொல்கிறார்.

அதன் பிறகு ரோகிணி கோபப்படுவார் என மனோஜ் எதிர் பார்க்க அவர் தன்னுடைய தோழி திவ்யாவுடன் சேர்ந்து சிரிக்கிறார். பிறகு மனோஜ்க்கு இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை இப்போதைக்கு வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் ஆபீஸ் போற மாதிரி பியூட்டி பார்லர் கிளம்பி வந்துடு வேற வேலைக்கு அப்ளை பண்ணலாம் என்று ஆறுதல் சொல்ல மனோஜ் இதை இவ்வளவு ஈஸியா எடுத்துப்பேணு நினைக்கவே இல்லை என சந்தோஷப்படுகிறார்.

பிறகு ரோகிணியின் தோழி கிடைச்ச வேலையைக் கூட காப்பாத்திக்க தெரியல இவனை கட்டிக்கிட்டு நீ எப்படி சந்தோஷமாக வாழ்வ என கேட்க அவன்கிட்ட சில குறை இருக்கு தான், அதெல்லாம் நான் ஏத்துக்கிட்டா தான் என்கிட்ட இருக்க குறைகளை அவன் ஏத்துக்குவான் என்று தன்னுடைய திட்டத்தை சொல்கிறார்.

அதன் பிறகு டப்பிங் ஸ்டூடியோவில் ஸ்ருதி ஒரு சீரியலுக்கு கண்ணீருடன் டப்பிங் பேச பிறகு தனக்கு போர் அடிக்குது சாப்பிட்டு வரேன் என சொல்லி ஆபீஸில் வேலை பார்க்கும் பையனிடம் பணத்தை கொடுத்து வித்தியாசமாக ஏதாச்சு வாங்கிட்டு வர சொல்லி அனுப்ப அவன் ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு வந்து வித்தியாசமான டிஷ் வேணும் என கேட்க அங்கிருந்தவர் ரவியை கூப்பிட்டு விடுகிறார்.

பிறகு அந்தப் பையன் சுருதிக்கு போன் செய்து கொடுக்க ரவி வித்தியாசமா ஒரு டிஷ் பண்ணி இருக்கேன் என்று சொல்ல சுருதி என்ன என்று கேட்க தோசை என்று சொல்ல கடுப்பாகிறார். பிறகு சவர்மா தோசை என்று சொல்லி அதைப்பற்றி பேச ஸ்ருதி சரி கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்கிறார்.

ரவி சாப்பாடு பற்றியும் கஸ்டமரின் உடல்நிலை பற்றியும் பேசிய விஷயங்கள் ஸ்ருதியின் மனதை கவருகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Episode Update
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

1 hour ago

டியூட்: 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

1 hour ago

ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…

2 hours ago

மாதவி சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் உண்மையை சொன்ன ரஞ்சிதா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

3 hours ago

விஜய் பார்வதி மற்றும் பிரவீன் உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

3 hours ago

Azhagiyaley video song

Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…

4 hours ago