Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த போலீஸ் கோபியிடம் உங்களுடைய மனைவி யார் என கேட்க கோபி அமைதியாகவே இருக்க ராதிகாவின் அம்மா ராதிகா கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து இதை யார் கட்டுனது என கேட்க நான் கட்டினது தான் என கோபி பதில் சொல்கிறார்.
உங்க புள்ளையே சொல்றாரு ராதிகா தான் அவருடைய மனைவினு, அப்படி இருக்கும் போது அவங்கள இந்த வீட்ல இருக்கக்கூடாது என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என கேள்வி கேட்க ஈஸ்வரி பாக்கியா தான் இந்த வீட்டில இருப்பா இவ இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மீண்டும் மீண்டும் ராதிகாவின் அம்மாவுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போலீஸ் இருவரையும் தடுத்து நிறுத்துகிறது. பிறகு இவங்களுக்கு என் பொண்ண வீட்டை விட்டு வெளியே தள்ளிட்டு திரும்பவும் முதல் மனைவியோட சேர்த்து வைக்கணும் அதுதான் திட்டம் என சொல்ல போலீஸ் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இவங்க இல்லனா அவங்க, அவங்க இல்லனா இவங்கனு வாழ முடியாது சட்டப்படி யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அவங்க கூட தான் சேர்ந்து வாழணும் என சொல்கின்றனர்.
ராதிகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிற உரிமை உங்க யாருக்கும் கிடையாது என்று சொல்லி இப்போ என்னதான் சொல்ல வரீங்க என்று ஈஸ்வரியிடம் கேட்க இவ இங்கே இருக்க கூடாது என்று சொல்கின்றார். அப்போ உங்க பையன் என்று கேட்க அவன் எங்களோட இருக்கட்டும் என்று பதில் சொல்கிறார்.
அது எப்படிமா உங்க புள்ள மட்டும் வேணும் உங்களுக்கு உங்க மருமகள் வேண்டாமா? ராதிகா இங்கதான் இருப்பாங்க நீங்க ஏதாவது பிரச்சனை பண்ணா குடும்பத்துடன் தூக்கி உள்ள வைக்க வேண்டியிருக்கும் என ராதிகாவை வீட்டுக்குள் போக சொல்ல அவர் வன்மத்தோடு வீட்டுக்குள் நுழைகிறார்.
அதன் பிறகு ராதிகாவின் அம்மா என் பொண்ணுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தீங்க மொத்த பேரையும் தூக்கி உள்ள வச்சுருவேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.
இதைத் தொடர்ந்து எல்லாரும் கோபியை ரவுண்டு கட்டி கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவ போலீச கூட்டிட்டு வந்து அவ்வளவு பேச்சி பேசும்போது நீ அமைதியாக இருக்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என ஈஸ்வரி கோபப்படுகிறார்.
ராமமூர்த்தி இரண்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுக்குற வயசுல உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வாழ்ந்துட்டு இருக்க என திட்டுகிறார். நீ எங்கள சந்தோஷமா வச்சுக்க வேண்டாம் ஆனா நீயாவது நிம்மதியா இருக்கியா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் மத்தளம் போல அடி வாங்கிட்டு இருக்க. உன் வாழ்க்கைல இருந்து ராதிகாவை மொத்தமா ஒழிச்சு கட்டு அப்பதான் உன்னால நிம்மதியா இருக்க முடியும் என ஆவேசப்படுகிறார்.
பிறகு கோபி ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க அம்மா என அவரை தொட போக தொடாத டா, கையை எடு எனக்கு இந்த வயசுல இவ்வளவு அவமானம் தேவையா? உன்னையும் உன் பொண்ணையும் பிரிக்க பார்க்கிறா? அதை கேட்க போனதுக்கு எனக்கு இந்த நிலைமையா? என்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்றா என்று கோபப்பட கோபி நான் அவ கிட்ட பேசுறேன் என மேலே வருகிறார்.
மேலே வந்த கோபி ராதிகாவிடம் நீ எப்படி அம்மாவை வெளியே போக சொல்லலாம் என கேட்க உங்கம்மா குடிக்கிற காபி கப்பை தட்டி விட்டாங்க, கண்டபடி பேசினாங்க என்று சொல்ல இவ்வளவு நடந்து இருக்கா என கோபி குழப்பம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…