அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் முத்து இருவரையும் உட்கார வைத்து சமாதானம் பேச பணம் எவ்வளவு கேப்பிங்க என்று கிருஷ்ணா ராம் கேட்கிறார். எங்க அம்மாவ கொன்ன மாதிரி உங்க அப்பாவ ரோட்ல வந்து நிக்க சொல்லுங்க நான் இதே மாதிரி பண்ணிட்டு பணம் கொடுத்து விடலாம் சரியா போயிடுமென்று சொல்ல முத்து என்னடா சொன்ன என்று கோபப்பட்டு அருணின் சட்டையை பிடிக்கிறார் உடனே கிருஷ்ணா ராம் நீங்க போய் கோர்ட்டிலேயே பார்த்துக்கோங்க இந்த மாதிரி சண்டை போடறதுக்காக வாங்க சமாதானம் பேச வர சொல்லி இருக்கோம் என்று சொல்லி கோபப்படுகிறார் உடனே செல்வம் வேண்டாம் மேடம் இங்கே பேசிக்கலாம் கோர்ட்டுக்கு போனா என்னோட பொழப்பே போயிடும். கார் ஓட்டுவது நம்பி தான் என் குடும்பமே இருக்கு என்று கெஞ்சுகிறார் உடனே மீண்டும் அனைவரும் உட்கார்ந்து பேசுகின்றனர். அப்போது அருண் 25 லட்சம் வேண்டும் என்று சொல்ல அதற்கு முத்து எங்களால எப்படி அவ்வளவு கொடுக்க முடியும் காரை வாடக கார் தான் ஓட்டிக்கிட்டு இருக்கான் அதுவும் இல்லாம ஒரு நாளைக்கு கார் ஓட்டி நாங்க சம்பாதிக்கறதுக்குள்ள நாங்க படுற கஷ்டம் எவ்வளவு இருக்கு தெரியுமா என்று முத்து சொல்ல உடனே அருண் 15 லட்சத்திற்கு வருகிறார். மீண்டும் முத்து அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து பேச அருணின் கிருஷ்ணா ராம் 15 லட்சம் ரொம்ப அதிகம். கோர்ட்டுக்கு போனா கூட உங்களுக்கு இந்த காசு கொடுக்க மாட்டாங்க என்று சொல்லிவிடுகிறார்.

இறுதியாக அருண் அஞ்சு லட்சம் குடுங்க இதுக்கு மேல என்னால குறைக்க முடியாது என்று சொல்லி உறுதியாக சொல்லிவிட சீதா முத்துவிடம் முடிச்சுடுங்க மாமா இதுக்கு மேல பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்று சொல்ல செல்வத்திடம் அவரது மனைவி விடுங்க எங்கேயாவது காசு பெரட்டி பார்க்கலாம் என்று சொல்ல ஒரு மாசம் டைம் கொடுங்க எப்படியாவது ரெடி பண்ண பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு அங்கே கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர் மறுபக்கம் ரவி கோவமாக நீத்து வீட்டுக்கு வந்து நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க நான் சொல்லும் போது நீங்க வரணும் ரவி என்ன வந்து பாத்துட்டு போங்க வேற ஒன்னும் நான் உங்கள கேட்க மாட்டேன் அப்படி நீங்க பண்ணலனா நான் இது மாதிரி நான் பண்ணுவேன் என்று சொல்ல நான் ஸ்ருதியோட ஹஸ்பண்ட் உங்களுக்கு தெரியுதா இல்லையா என்று சொல்ல நீங்க ஸ்ருதிக்கு ஹஸ்பண்ட் மட்டும்தான் ஆனா நீங்க எனக்கு எல்லாமே நீங்கதான் என்று சொல்லுகிறார்.

உங்க ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்ததே தப்புன்னு இப்ப தோணுது உங்க மேல நான் அவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். நீங்களே இப்படி கெடுத்துக்காதீங்க நீங்க உங்களோட ஈகோவால தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் என்று சொன்ன அனைத்து வழக்கம் போல் உங்களை லவ் பண்ண சொன்னேன் கல்யாணம் பண்ணிக்க சொல்லல ஆனா நான் கூப்பிடும் போது ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போனா போதும் என்று சொல்ல ரவி கோபமாக சென்று விடுகிறார். ரவி என மீண்டும் கூப்பிட்டு அவரை போனில் போட்டோ எடுத்து விட்டு இன்னொருவாட்டி கூப்பிடுறதுக்குள்ள இந்த போட்டோவை பார்த்து கிட்டு இருப்பேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்து, மீனா வீட்டுக்கு வர அண்ணாமலை என்ன விஷயம் என்ன ஆச்சு என்று கேட்க நல்லபடியா தான் முடிஞ்சது என முத்து இருக்க என்னடா ஆச்சு என்று கேட்கிறார் 15 லட்சம் கேட்டாங்க மாமா அதுக்கப்புறம் இவரு கஷ்டப்பட்டு பேசினா அதுக்கப்புறம் அஞ்சு லட்சத்துக்கு வந்தாங்க என்று சொல்ல உடனே மனோஜ் 5 லட்சத்துக்கு வந்ததே பெரிய விஷயம் நானா இருந்தா அஞ்சு கோடி கேட்டு இருப்பேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் உடனே விஜயா அதுக்காக ரோட்ல அடிபட்டு சாக சொல்றியா என்று சொல்ல நான் அப்படி சொல்லனுமா என்று சொல்லுகிற உடனே விஜயா அமைதியாக இருக்க சொல்லுகிறார் அண்ணாமலை முத்துவிடம் சீதா அருண் நன்றாக பார்த்துக்கொள்கிறானா என்று கேட்கிறார் ஏன்பா எப்படி கேட்கிறேன் என்று சொல்ல ஒரு இது ஒருத்தர் இருக்கிற மனநிலையை வச்சு தான் அவங்க அவங்க பொண்டாட்டி எப்படி பார்த்து இருக்காங்கன்னு தெரியும் அதனால தான் கேட்டேன் என்று சொல்ல மீனா தயங்கிக்கொண்டே அவளுக்கு ஒன்னும் பிரச்சன இல்ல மாமா நல்லதா பார்த்துக்கொள்கிறார் என்று சொல்லுகிறார்.

உடனே இவர்கிட்ட வந்து பணத்தை கேக்காதீங்க என்று விஜயா சொல்ல நாங்க எதுக்கு கேட்க போறோம் என்று சொல்லுகிறார். உடனே விஜயாவும் மனோஜ் சென்றுவிட முத்து மீனாவும் இரவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பா சொன்ன விஷயத்துல எனக்கும் சந்தேகமா தான் இருக்கு சீதா சந்தோஷமா தான் இருக்காளா என்று கேட்க மீனா அவர் சந்தோஷமா தான் இருக்கா என்று சொல்லுகிறார். உடனே நீங்க டிரைவர்ங்ல பத்தின கஷ்டத்தை சொல்லும்போது எனக்கு கண்ணே கலங்கிடுச்சு என்று சொல்லுகிறார் அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ரொமான்ஸ் ஆக முத்து மீனாவை ஏற்றுக் கொஞ்சி பேச யாராவது வந்துருவாங்க என்று சொல்ல அண்ணாமலை பார்த்து விடுகிறார். உடனே அவர் தயங்கிக் கொண்டு ரூமுக்குள் செல்ல மீனா வாங்க மாமா என்ன வேணும் என்று கேட்பது சுடுதண்ணி எடுக்க வந்தேன் என்று சொல்லுகிறார் நான் எடுத்துட்டு வரேன் மாமா என்று சொல்ல அண்ணாமலை சென்று விட்டு உள்ளே யோசிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? ரோகிணி என்ன செய்கிறார்? கிரிஸ்க்கு என்ன ஆகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 16-02-26
jothika lakshu

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

9 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

10 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

10 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

10 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

2 days ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

2 days ago