Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து சொன்ன வார்த்தை, ரோகினி செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 15-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிற்காக சாப்பாடு கொடுத்து விட்டிருக்க முத்து சாப்பாடு திறந்து பார்த்து யோசித்துக் கொண்டிருக்க மீனா பக்கத்தில் இருப்பது போல தோன்றுகிறது பிறகு இல்லாமல் இருப்பதால் முத்து மீனா கொடுத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். கொஞ்ச நேரத்தில் மீனா பூ கட்டுபவர்களிடம் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இங்கே இருக்கீங்க என்று கேட்க ஆட்டோகாக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் மீனா என்று சொல்லுகின்றனர் உடனே முத்துவின் கார் வர பூக்கட்டும் பெண் அண்ணனோட கார் வந்துடுச்சு என்று சொல்லி அவரிடம் சவாரி எங்காவது போறீங்களா என்று கேட்க இல்லை இப்பதான் முடிச்சுட்டு வரேன் என்று சொல்லுகிறார் எங்களை கொஞ்சம் கோயம்பேடு வரைக்கும் விட்டுடுங்க என்று சொல்ல அவ்வளவுதானா வாங்க என்று சொல்லுகிறார்.

முத்துவும் மீனாவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே இருக்க, உங்களுக்குள்ள சண்டையா என்று கேட்கின்றனர்.மீனா வர தயங்குவதால் பிறகு பூ கட்டுபவர்கள் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். பிறகு காரில் போகும்போது மீனா முத்துவையும் முத்து மீனாவையும் பார்த்துக் கொண்டே வர பூக்கட்டும் பெண் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரலைன்னா சந்தோஷமாக இருக்க முடியாது என்றெல்லாம் ஜாலியாக பேசி வருகிறார்

கொஞ்ச நேரத்தில் இறங்கும் இடம் வந்துவிட மீனா இறங்கி கீழே நிற்க இருவரும் அமைதியாக பார்த்துக் கொள்கின்றனர் மீனா வீட்டுக்கு வா என்று ஒரு வார்த்தை சொன்னால் ஓடி வந்துருவேன் கூப்பிடறாரா பாரு என்று மனதில் நினைக்க முத்து வரேன்னு ஒரு வார்த்தை சொன்னாளா தூக்கிட்டு போயிடுவேன் சொல்றாளா பாரு என்று இருவரும் நினைத்துக் கொண்டே இருக்க பூ கட்டுபவர்கள் அண்ணன் கூட பேசிட்டு வா நான் கிளம்புறேன் என்று சொல்ல உடனே மீனா கிளம்பி சென்று விடுகிறார்.

ஷோரூமில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் ஒரு இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடித்துக் கொண்டிருக்க வேலை செய்பவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரோகிணி உனக்கு எப்படி இப்படி தோணுச்சு மனோஜ் என்று கேட்கிறார். அதுவா ரெண்டு இளநீர் கேட்ட ஒரு இளநீர் என்பது ரூபாய் சொன்னா அதனாலதான் இப்படி பண்ணேன் என்று சொல்ல ரோகினி டென்ஷன் ஆகிறார். பிறகு இவர்கள் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்க புதியதாக புருஷன் பொண்டாட்டி இரண்டு பேர் வருகின்றனர்.

அவர்களுக்கு வேலை தேவைப்படுவதாக சொல்லி கேட்க ஒருத்தருக்கு தான் வேலை இருக்கு என்று சொல்ல அவர்கள் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் எங்களுக்கு ஒருத்தர் கொடுக்கிற சம்பளமே பிரிச்சு கொடுத்தா கூட போதும் தங்க இடம் வேண்டும் என்று சொல்ல சோரூம்ல இடம் இருக்கு தங்கிக்கோங்க என்று சொல்லுகின்றனர் கொஞ்ச நேரத்தில் ரோகினி இவங்கள வேணா நம் வீட்டில் சமைக்க கூட்டிட்டு போகலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

ரோகினி வீட்டுக்கு வந்து என்ன சொல்லுகிறார்? குடும்பத்தாரின் முடிவு என்ன? என்பதை எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 15-07-25