Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து சொன்ன வார்த்தை, கோபத்தில் சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 08-07-25

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடு முத்து அருனிடம் இவனுக்கு இது இரண்டாவது கல்யாணம் ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு இவன் தாலி கட்டிருக்கான் அந்த பொண்ணு இவன் கூட வாழாமல் போய் இருக்கோம் நம்ம சீதாவை ஏமாத்த பார்க்கிறான் என்று சொல்ல உடனே அண்ணாமலை என்னப்பா இது போலீஸா இருந்துகிட்டு இப்படி பண்ற என்று கேட்க அப்படி இல்ல சார் எனக்கு முதல் கல்யாணம் நடந்தது சீதா கூட தான் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் யாரும் நம்பாமல் இருக்க அருண் நண்பர் உண்மையை சொல்லி விடுகிறார். உடனே சீதாவிடம் இதெல்லாம் உண்மையா என்று கேட்க ஆமாம் என்று சொல்ல முத்து உடைந்து போய் நிற்கிறார். எங்க வீட்டு பொண்ணு உன் வீட்டுக்கு தெரியாம இப்படி ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கியே என்று அருண் இடம் கேட்க அதற்கு அருணின் நண்பர் அவன் உன்னையும் உங்க வீட்ல இருக்குற யாருகிட்டயும் தெரியாம எல்லாம் பண்ணல மீனா கிட்ட சொல்லி அவங்க தான் சாட்சி கையெழுத்து போட்டாங்க என்று சொல்லுகிறார்.

ஆனால் முத்து என் பொண்டாட்டி மேல பழியை போட பாக்குறீங்களா அவ அப்படி பண்ணக்கூடிய ஆள் கிடையாது அவ அப்படி பண்ணியிருக்க மாட்டா என்ன மீனா என்று பேச வர மீனா கை எடுத்து கும்பிட்டு என்னை மன்னிச்சிடுங்க நான் தான் கையெழுத்து போட்டேன் என சொல்ல முத்து வாய் பேச முடியாமல் உறைந்து போய் நிற்கிறார் உடனே மீனாவின் அம்மா கோபப்பட்டு சீதாவை அடிக்க மீனா தடுக்க வர நீ பேசாத பெத்தவனா இருக்கும்போது நீங்க இப்படி ஒரு முடிவு எடுப்பீங்களா என்று கோபப்படுகிறார். சீதாவும் இவனும் தான் என்னை மதிக்காம அசிங்கப்படுத்தினார்கள் என்றால் நீ என்ன தல குனிய வச்சுட்டு இல்ல என்று சொல்ல மீனா பேச வர உடனே முத்து பேச வேண்டாம் என தடுக்கிறார். என்னோட சம்மதம் வேணான்னு நினைக்கிறவங்க இடத்துல நான் எதுக்கு இங்க இருக்கனும் நான் இங்க ஒரு முட்டாள் மாதிரி இருந்திருக்கேன் என சொல்லிவிட்டு மண்டபத்தில் இருந்து கிளம்ப மீனாவின் அம்மா முத்து பின்னாலே சென்று இருக்க சொல்ல இல்லாத கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க அப்புறம் என்ன இருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

உடனே சந்திரா கோபத்தில் சீதாவையும் மீனாவையும் அடிக்க அண்ணாமலை நடந்தது நடந்திருச்சு இப்ப இவங்களுக்கு இந்த கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம் என்று சொல்ல அதுதான் ஏற்கனவே பண்ணிக்கிட்டார்களே என்று சொல்லுகிறார் மாப்பிள்ளை யோட சம்மதத்தோட தான் இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டேன். இன்னைக்கு அவர் தல குனிஞ்சு போறாரு மாப்பிள்ளை இல்லாத இந்த கல்யாணத்துல நானும் இருக்க மாட்டேன் இவர்களே நடத்திக்கட்டுமே என்று மண்டபத்திலிருந்து கிளம்ப அவரை தடுத்து நிறுத்துகின்றனர். மறுபக்கம் முத்து ஒயின்ஷாப்பில் குடிக்க உட்கார செல்வம் வருகிறார் மூன்று கிளாஸில் ஊற்றி வைக்க எதுக்கு என்று கேட்க முதல்ல என் பொண்டாட்டி பண்ண துரோகம் இரண்டாவது அருண் ஏமாத்தினது மூணாவது எனக்காக நான் ஒரு பெரிய முட்டாள் என சொல்ல, செல்வம் குடிக்க வேணாம் வா போகலாம் என்று சொல்ல முத்து செல்வத்தை அனுப்பி விட்டு குடித்துக் கொண்டிருக்கிறார்.

மண்டபத்தில் ரூமில் அருண் நண்பரிடம் நீ எதுக்கு மீனாதா கையெழுத்து போட்டாங்கன்னு சொன்ன என்று கேட்க முத்து ஓவரா பேசினா அதனாலதான் சொன்னேன் அதெல்லாம் விடு போகணும் பிரச்சனை இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல கமிஷனர் வந்துருவாரு உன் கல்யாணம் நடக்கும் என சொல்ல உடனே அருமை அம்மா வந்து என்கிட்ட கூட ஏன் சொல்லல அவன் சிச்சுவேஷன் எனக்கு புரியுது ஆனா என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் சரி இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கும் என அவரும் சொல்லிவிட்டு சென்றுவிட ரூமில் சந்திரா உட்கார்ந்து கொண்டிருக்க சீதா அழுது கொண்டே மன்னிப்பு கேட்க உன் வாழ்க்கையை மட்டும் பார்த்தியே என்னைக்காவ வாழ்க்கை என்ன ஆச்சுன்னு பாத்தியா உனக்கு இப்ப சந்தோஷமா என்று கேள்வி கேட்டு அழுகிறார். உடனே சத்யா வெளிய எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க அடுத்து என்ன நடக்கணும் என்று சொல்ல அடுத்து என்ன மாப்பிள்ளையே போயிட்டாரு அதுக்கு அப்புறம் நான் என்ன சொல்ல முடியுமா அவர் வராமல் இந்த கல்யாணம் நடக்காது என்று சந்திரா உறுதியாக இருக்கிறார்.

பிறகு மீனா என்ன முடிவு எடுக்கிறார்? சீதாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 08-07-25
SiragadikkaAasai Serial Episode Update 08-07-25