siragadikkaaasai serial episode update 02-01-26
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு தலைவலியா இருக்கு யாருமே அவர பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க என்று விஜயா டென்ஷன் ஆக பேச உடனே ரோகினி நான் உங்களுக்கு டீ போட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார் அங்கே மகேஸ்வரி கொடுத்த மாத்திரையை டீயில் கலந்து விஜயாவிற்கு கொடுத்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் மகேஸ்வரி போன் போட ரோகிணி ரூமில் சென்று பேசுகிறார் நீ சொன்ன மாதிரி அந்த மாதிரியை கொடுத்துட்டேன் என்று ரோகினி சந்தோஷமாக பேச மகேஸ்வரி கொடுத்துட்டியா என்று அதிர்ச்சியாக கேட்கிறார். ஆமாம் என்று ரோகினி சொல்ல அது தூக்*மாத்திரை கிடையாது சாதாரண விட்டமின் டேப்லெட் என்று சொல்லுகிறார்.
உடனே ரோகினி என்னடி சொல்ற நீயே நல்ல பிளானு கொடுத்துட்டு இப்படி சொதப்பி இருக்க என்று சொல்ல அவங்க இன்னும் ரொம்ப ஆக்டிவா தெம்பா இருப்பாங்க அது எனக்காக நான் வாங்கிட்டு வந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே விஜயா ரோகினி ரூமுக்கு முன் வந்து வெளிய வாடி என்று கூப்பிட போச்சி ஏற்கனவே என்ன வச்சி செய்வாங்க தெம்பா வரை இருக்காங்கன்னு சொல்ற என்ன நடக்க போகுது தெரியல நான் உன்ன வந்து பாத்துக்குறேன் என சொல்லிவிட்டு விஜயாவிடம் வந்து பேசுகிறார் போய் முதல்ல பூஜை ரூமை கிளீன் பண்ணு என்று சொல்லி மிரட்டி அனுப்புகிறார். உடனே மீனாவிடம் போய் கோலம் போடு என்று சொல்லி அனுப்பிவிட்டு பிறகு விஜயா உட்கார்ந்து சாமி கும்பிட ரோகினியையும் உட்காரச் சொல்லுகிறார்.
உடனே ஜெய் காளி என்று சொல்லி ரோகிணியின் தலையில் ஓங்கி கொட்டிக் கொண்டே பூஜை செய்கிறார் உன்னால தாண்டி இப்படி ஆச்சு அதனாலதான் என் பையன் கடைக்காரரான என்று சொல்லி கையில் தீபத்தை ஏற்றியும் தலையில் கொட்டியும் ரோகினியை வச்சு செய்ய ரவி ஏதாச்சு பண்ணு முத்து வாங்கி ரொம்ப பாவம் வழியில் துடிச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே முத்து ரவி எனக்கு போன் போடு என்று சொல்லிவிட்டு அமைதியாக விட ரவியும் போன் போடுகிறார் உடனே முத்து அங்கிள் நாளைக்கு அப்பா வந்துருவாரா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு போனை வைக்க விஜய் அப்போதுதான் அமைதியாகிறார். நீங்க யாரு தேடியும் கிடைக்கல நான் பண்ண பூஜையில தான் அவரு வரேன்னு சொல்லி இருக்காரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறேன் பிறகு மீனா முத்து மாமா நாளைக்கு வந்துருவாரு இல்ல என்று கேட்க அவர் எங்க வருவாரு பார்லர் அம்மாவை டார்ச்சர் பண்றது தாங்க முடியாம தான் பொய் சொன்னேன் என்று சொல்லுகிறார்.
ரூமில் ரோகிணி வலியில் துடித்துக் கொண்டிருக்க மனோஜியிடம் தேய்த்து விட சொல்லுகிறார் நீ உங்க அம்மாகிட்ட ஏன் இப்படி பண்றீங்கன்னு கேக்க மாட்டியா என்று சொல்ல நான் கேட்கிறேன் ரோகிணி தலையை விட்டுட்டு மீதி எந்த இடத்தில வேணா அடிக்கணும்னு சொல்றேன் என்று சொல்ல உடனே ரோகினி கடுப்பாகி மனோஜ் திட்டி விட்டு துரத்தி விடுகிறார் . மறுநாள் காலையில் முத்து சொன்னது போல் அண்ணாமலை வந்து விடுவார் என விஜய் வாசலிலேயே எட்டிப் பார்த்துக் கொண்டு நின்று இருக்கிறார். பிறகு முத்து விஜயாவிடம் என்ன சொல்லுகிறார்? அண்ணாமலை வந்தாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…