தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவுடன் புதிய டெக்ரேசன் செய்த மாடல்களை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு வருகிறார் நான் போய் மேனேஜரைபார்த்துட்டு வரேன் என்று சொல்ல நானும் வர என்று முத்து சொல்லுகிறார் ஆனால் மீனா என்னோட பிசினஸ் நானே பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். சரி வரும்போது எப்படி வருவ என்று கேட்க நான் ஆட்டோ புடிச்சு வந்திருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அந்த டிசைன்களை மேனேஜரிடம் சொல்லி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து டெக்கரேஷன் ஆர்டர் எடுக்கும் பெண்மணி வருகிறார். மீனாவிடம் வம்பு இழுத்து பேசி கொண்டிருக்கிற அவர்களுடைய ஆட்கள் மீனாவின் டெக்கரேஷன்களை உடைத்து குப்பை தொட்டியில் போடுங்க போடுகின்றனர் இதனால் கடுப்பான மீனா ஒரு நாள் இந்த டெக்கரேஷன் கோபுரமா மாறும் என்று சவால் விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கம் விஜயா பார்வதியின் வீட்டிற்கு வருகிறார்.
என்ன விஷயம் எதற்கு வர சொன்னேன் என்று கேட்க கொஞ்ச நாள் கிளாசுக்கு வரலையே பசங்க வந்து போறாங்க அதனால நானே எனக்கு தெரிஞ்ச ரெண்டு ஸ்டெப் சொல்லிக்கொடுத்த என்று சொல்ல நீ சொல்லிக் கொடுத்தியா உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க நீதான் டெய்லி ஆடிட்டு இருக்க இல்ல அத பாக்குற அதனால அப்படி சொல்லிக் கொடுத்தேன் என்று சொல்லுகிறார் அதெல்லாம் நீ பண்ணாத தப்பா சொல்லிக் கொடுத்துட்டு பசங்க தப்பா கத்துக்கிட்டா என்ன செய்யறது வேண்டாம் என சொல்லுகிறார். நீ ரெண்டு நாள் ஊருக்கு போயி இருக்குன்னு சொல்லி இருக்கேன் இன்னைக்கு வர சொல்லவா என்று சொல்ல வேண்டாம் ரெண்டு நாள் போகட்டும் என்று விஜயா முடிவெடுக்கிறார்.இங்க வராம இருந்தா உங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா தான் இருந்திருக்கும் என்ன ஆச்சு என்று ஆரம்பிக்கிறார் பார்வதி.
உடனே நடந்த விஷயங்களை சொல்ல பார்வதி என்ன இருந்தாலும் பையனுக்காக தானே பண்ணி இருக்கா அவளுக்காக ஏதாவது பண்ணிக்கிட்டாளா என்று கேட்க ஆயிரம் தான் இருந்தாலும் பணம் வந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி இருந்தா அதை எப்படி மறைக்கணும் என்ன பண்ணனும்னு நான் சொல்லி இருப்பேன் என்று சொல்ல அதன பாத்த நீயாவது பணத்தை அண்ணன் கிட்ட கொடுக்கிறதாவது என்று மனசுக்குள்ள நினைக்கிறார்
உடனே பார்வதி நீ மத்த மருமகளை விட ரோகினி மேல தான் பாசம் அதிகமா வச்சிருந்தா அதே மாதிரி தான் ரோகினி உன்ன அம்மாவ பாத்தா ஆனா இப்போ நீ இது மாதிரி பண்ணா எப்படி என்று கேட்கிறார். இது மட்டும் இல்லாமல் அவ கோடீஸ்வர வீடு ஒரே பொண்ணு அப்படி இருக்கும்போது நாளைக்கு பணம் கைக்கு வந்ததோ உன் பையன் அவன் பக்கம் போயிடுவான். அவனும் ஒரு பையன் மேல அதிகமா பாசம் வச்சு இருக்கா என்று சொல்ல என்னோட அதிகமா வைக்க முடியாது என்று சொல்லுகிறார்.
அதற்கு பார்வதியின் வாழ்க்கையை உதாரணமாக வைத்து பணம் வந்தால் உன் பையனை கூப்பிட்டு தனியா போயிட்டு வா என்று எல்லாம் சொல்ல விஜயா யோசிக்கிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த விஜயா என்னை யோசிக்கிறார்கள்? அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? விஜயாவின் முடிவு என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
