தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் நடித்து வரும் முத்து என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அதில் வெற்றி வசந்த் சீரியல் குழுவினருக்கு ஊட்டி விட அவர்களும் வெற்றிக்கு ஊட்டி விடுகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் அவரது காதல் மனைவியான வைஷு அவரது பிறந்த நாளை காரில் பலூன் மற்றும் கிப்ட் கேக் வைத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார்.
இந்த வீடியோவை வைஷு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெற்றியை கேக் கட் பண்ணிய பிறகு வைஷு கொடுத்த கிப்ட் களை பிரித்து பார்த்து சர்ப்ரைஸ் ஆகிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram