Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial today episode update 11-03-26

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷ் வலி தாங்க முடியாமல் நடந்து வர மனோஜ் இதெல்லாம் ஒரு ஐடியாவா என்று கேட்கிறார் இதெல்லாம் உங்களுக்காக தான் பண்ணேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ரோகினி வருகிறார். ரோகினியை பார்த்து அலறி அடித்துக் கொண்டு சந்தோஷம் மறைந்து கொள்ள ரோகினி சிரிக்கிறார். எதுக்கு என்னோட பிரண்டு ஆளு வச்சி அடிக்கிற அளவுக்கு நீ பெரிய ஆள் ஆயிட்டியா என்று சொல்ல நீ மட்டும் என்ன ஒரு வைஃபை நடத்தர மாதிரியா நடத்துன என்று கேட்கிறார் உனக்கு என்ன இதெல்லாம் புதுசா என்று மனோஜ் கேட்கிறார்

இது மட்டுமில்லாமல் ரோகிணி உனக்கே முதல்ல நல்ல ஐடியா யோசிக்க தெரியாது உன் கூட இருக்கிற சந்தோஷத்தில் நல்லா ஐடியாவா கொடுக்க முடியும் என்று சொல்லுகிறார் இப்ப எதுக்கு நீங்க வந்த என்று கேட்டால் ஒரு லட்ச ரூபாய்க்கு சீர்வரிசை ஆர்டர் வந்திருக்கு அதற்கான செக்கு என்று சொல்லிக் கொடுக்கிறார் உனக்கு ஒன்னா என் மேல அப்புறம் எல்லாம் இருக்கலாம் ஆனால் இது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தொடங்கினா ஷோரூம் எப்பவும் நீ தொழிலதிபரா இருக்கணும் மனோஜ் அதுதான் என்னோட ஆசை என்று சொல்லி மனோஜ் பக்கத்தில் உட்கார்ந்து பேசுகிறார் சரி நான் கிளம்பட்டுமா என்று சொல்ல மனோஜ் சரின்னு சொல்லுகிறார். மறுபக்கம் மீனா பூக்கடையில் பூ கொடுத்துக் கொண்டிருக்க முத்து வருகிறார் என்ன இவ்வளவு லேட் கரட் டைமுக்கு சாப்பிட வேண்டாமா என்று கேட்கிறார்.

உடனே முத்து நைட்டுக்கு செய்யும் போது எக்ஸ்ட்ரா ரெண்டு பேருக்கு சேர்த்து சப்பாத்தி செஞ்சுட்டு என்று சொல்லுகிறார் ஏன் என்று கேட்க நான் சப்பாத்தி தறந்து பரிமாறும் போது அவங்க ரெண்டு பேரும் வாசனைக்காக இங்க வந்துடுறாங்க அதனால அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து சமைச்சு கொடு என்று சொல்ல மீனாவும் சரி என சொல்லுகிறார் நீ அந்த வீட்டுக்கு போயிட்டோங்க சமைச்சு கொடுக்கிற வேலை உனக்கு போகல என்று சொல்ல நான் சந்தோஷமா தாங்க சமைச்சு கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து உதவி செய்த நபர் வந்து இந்த அப்பார்ட்மெண்டில் நான் செக்ரேட்டராக இருக்க என் பையன் இப்போ நல்லா இருக்கா நீங்க செய்த உதவியை நான் மறக்க மாட்டேன் அதுக்காக நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யப் போறேன் என்று சொல்ல முத்து அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுகிறார் அவர்கள் பரவாயில்லை, நீங்க கார் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க இல்ல 12 சீட்டு வச்சு ஒரு வேன் வாங்கிட்டீங்கன்னா உங்களுக்கு டிராவல்ஸ் ஹெல்ப் பண்ற அதுவே இல்லாம இந்த அபார்ட்மெண்ட்ல இருந்து டூர் போவாங்க அதுக்கும் யூஸ் பண்ணிக்கலாம் உங்களுக்கு சவாரி ரெடி பண்ணி கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்ல கடன் அதிகமா இருக்கு சார் எங்களால இப்ப வாங்க முடியாது என்று சொல்லுகிறார். இப்போதைக்கு லோன் போட்டு வாங்கிக்கோங்க கண்டிப்பா உங்களால டீவ் கட்ட முடியும் என்று சொல்ல முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர் உடனே முத்து சந்தோஷத்தில் மீனாவை கட்டி பிடிக்கிறார். அவரும் இப்படியே இருந்துட்டு ஒன்னு நினைச்ச மீனா லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போறதுக்கான நேரம் வந்துருச்சு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.

நான் உடனே போய் வண்டி ஏதாவது இருக்கான்னு செக் பண்றேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார் மீனாவும் முத்துவை நினைத்து சந்தோஷப்பட மறுப்பக்கம் பார்வதி வீட்டில் சிந்தாமணியும் விஜயாவும் போன் பார்த்துக் கொண்டிருக்க பார்வதி யாரும் முக்கியமான ஆள் வருவாங்கன்னு சொன்னீங்க போன் பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் அவர்கள் வந்துவிட விஜயா அவர்களை வரவேற்று பார்வதி மற்றும் சிந்தாமணியை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் பார்வதி இடம் நீங்கதான கதை சொல்றவங்க உங்க கதையை எங்க வீட்டாண்ட இருக்கிற பசங்க எல்லாம் ரொம்ப கேக்கறாங்க ரொம்ப நல்லா கதை சொல்றீங்க என்று பாராட்டி பேச விஜயா உடனே நான் இங்க பரதநாட்டியம் கிளாஸ் யோகாவும் கற்றுக் கொடுத்துட்டு இருந்தேன் அதை பார்த்து தான் பார்வதி இன்ஸ்பிரேஷன் ஆகி இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார் உடனே அவர்கள் வந்த விஷயத்தை பேசுகின்றனர்.

அதாவது மனோஜ்க்கு பெண் பார்க்க தான் விஜய் அவர்களை வர சொல்லி இருப்பது தெரிய வருகிறது அப்போது அவர்கள் பொண்ணுக்கு முப்பது வயசு ஆகுது தோஷம் காரணமா உங்களுக்கு கல்யாணம் தள்ளி போயிருந்தது உன்னோட அப்பா பிசினஸ் நிறைய பண்ணுவாரு என்று சொல்ல விஜயா உடனே பேராசைப்படுகிறார் இதுமட்டும் இல்லாமல் என் பையன் ரொம்ப படிச்சவன் அவனுக்கு நிறைய வரன்னு வந்துச்சு 200 பவுன்ஸ் போறேன்னு சொன்னாங்க என்றெல்லாம் கதை அடித்து விடுகிறார் உடனே அவர்கள் சரி நான் இதை பொண்ணோட அப்பா அம்மா கிட்ட பேசிட்டு நான் உங்ககிட்ட என்னன்னு சொல்றோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகின்றனர் விஜயாவின் பொய்களை பார்த்து சிந்தாமணியும் பார்வதியும் அதிர்ச்சி அடைய கல்யாணத்துல இது மாதிரி பொய் சொல்றதெல்லாம் சகஜம் தானே விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார் மறுபக்கம் சிந்தாமணி ரோகினி சந்தித்து என்ன பேசுகிறார்? ரோகிணி என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 11-03-26

siragadikka asai serial today episode update 11-03-26