ரோகினி கேட்ட கேள்வி, கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து,மீனாவிடம் கதிர் சிக்க, ரோகினி முத்துவிடம் கோபமாக பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினிக்கு சிட்டி போன் போட்டு எனக்கு ஒரு 15 நிமிஷம் முத்துவோட கார் சாவி தேவைப்படுது நான் சொல்லும்போது எடுத்துக்கிட்டு வந்து குடுத்தா போதும் அவனுக்காக ஒரு பெரிய திட்டம் போட்டு வச்சிருக்கேன் என்று சொல்ல நானே ஏற்கனவே பிரச்சினையில் இருக்கேன் ஏதாவது மாட்டிக்க போறேன் என்று கேட்க அந்த பிஏ வேற திருப்பி வந்துட்டா முத்துவும் உன்ன பிரச்சினையில் மாட்ட வச்சு உன் மாமியார் கிட்ட அடி வாங்க வைத்திருப்பான்ல என்று சொல்ல ரோகினியும் சம்மதித்து விடுகிறார்.

மறுபக்கம் முருகனும் வித்யாவும் பணம் கொடுக்க புது வீட்டுக்கு வர முருகன் முத்துக்கு ஃபோன் போட்டு அட்வான்ஸ் கொடுக்க வர சொல்லுகிறார். ஆனால் முத்து நீங்கதான் வாங்க போறீங்க நீங்களே கொடுங்க என்று சொல்ல நீங்க ரெண்டு பேரும் வந்து தான் கொடுக்கணும் என்று முருகன் உறுதியாக சொல்லிவிட முத்துவும் வரேன்னு சொல்லுகிறார். மறுபக்கம் வீட்டுக்கு சென்றவுடன் கதிர் வந்துட்டீங்களா பணம் கொடுக்குறீங்களா என்று கேட்க இல்லைங்க எங்களுக்கு தெரிஞ்சவங்க ரெண்டு பேரும் வரட்டுமா அவங்க தான் கொடுக்க போறாங்க என்று சொல்ல நீங்க வீடு வாங்க போறீங்க அதுக்கு எதுக்கு அவங்க கொடுக்கணும் என்று கதிர் கேட்க கதிரில் மனைவி பரவால்ல அவங்க வந்த உடனே கொடுக்கட்டும் என சொல்லுகிறார்.

பிறகு இவர்கள் இருவரும் வெளியே வந்த பிறகு குடுப்பாங்க கிளம்பிடலாம்னு பார்த்தா லேட் பண்றாங்களே என்று கதிர் சொல்ல கதிரின் மனைவி அவசரப்படுத்தினான் நம்ம மேல சந்தேகம் வந்துடும் அதனால பொறுமையா வாங்கிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கதிருக்கு போன் வருகிறது பக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கு போயிட்டு வரேன்னு சொல்லி அங்கிருந்து இருவரும் கிளம்ப முத்துவும் மீனாவும் வருகின்றனர் இருவரும் அவர்களை வெளியில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று பணத்தை தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு பேசுகின்றனர் முத்து நான் இவ்வளவு பணத்த நேர்ல பார்த்ததே இல்லை என்று சொல்லி கண்ணதாசன் டயலாக்குகளை பேசுகிறார்.

கொஞ்ச நேரத்தில் கதிரும் மனைவியும் வந்து கதவைத் தட்ட முருகன் திறக்கிறார் உடனே பணத்தை கொடுக்க ரெடியா என்று கேட்ட முத்து இவர்களை கவனித்து விட்டு நீ கதிர் தானே என்று சொல்ல மீனா ஆமாம் என்று சொல்லுகிறார் உடனே அவர்களிடமிருந்து தள்ளி விட்டு வெளியில் தப்பித்து ஓட பார்க்க முத்து வெளியில் இருந்து அடித்து எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் அவரது சட்டையை கழட்டி கையை கட்டி போடுகிறார் முருகன் ரொம்ப நன்றி அண்ணன் இல்லையென்றால் கஷ்டப்பட்டு சம்பாதித்த என் பணமோ காணாம போயிருக்கும் என்று சொல்ல உடனே முத்து எங்க அண்ணன் கிட்ட இருந்து எடுத்துட்டு போன பணம் எங்கே என கேட்க செலவாயிடுச்சு என்று சொல்லுகின்றனர் 30 லட்சம் மாமா என்று கேட்க ஆமாம் நானும் என் பொண்டாட்டியும் மலேசியா சிங்கப்பூரில் சுத்தணும் அதனால காலி ஆயிடுச்சு என்று சொல்ல முருகன் அப்ப கூட அவ்வளவு இருக்காது என்று சொல்லுகிறார் உடனே எல்லாம் கேக்குறவங்க கேட்டா தான பதில் சொல்லுவான் என போலீசுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுகின்றனர் உடனே மறுபக்கம் மனோஜ் ரோகினி காரில் வந்து கொண்டிருக்க முத்து போன் போட்டு கதிர் சிக்கிய விஷயத்தை சொல்லுகிறார் அவன விட்றாத புடிச்சுவை நான் வந்து விடுகிறேன் என சொல்ல லொகேஷன் முத்து அனுப்ப மனோஜ் ரோகினி உடன் வந்து மனோஜ் கதிரையும் ரோகினி அவரது மனைவியையும் அடிக்கின்றனர் உடனே போலீசும் வந்து விடுகின்றனர்

அவர்கள் இருவரையும் அரெஸ்ட் பண்ணி அழைத்துச் சென்று விட பிறகு இவர்கள் வீட்டுக்கு வருகின்றனர் வீட்டில் வந்து நடந்த விஷயங்களை சொல்ல விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு அண்ணாமலை பதில் என்ன? ரோகினி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial today episode update 08-05-25
jothika lakshu

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

2 hours ago

பிரம்மாண்டமாய் புத்தம் புது பொலிவுடன் புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க..!

நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…

3 hours ago

எஸ் டி ஆர் 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…

7 hours ago

எஸ் டி ஆர் 49 : டைட்டில் என்ன தெரியுமா? படக்குழு அறிவிப்பு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…

10 hours ago

முத்து எடுத்த முடிவு, பார்வதி இடம் விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

10 hours ago

கோபமாக பேசிய வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

11 hours ago